கூகுள் அதன் வாடிக்கையாளர்களுக்கென்று பிரத்தேயேகமாக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களில் முக்கியமான ஒரு வசதி தான் வாய்ஸ் பயன்படுத்தி பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி.  இந்நிறுவனமானது டிஜிட்டல் பழக்கங்களை மேம்படுத்த நியூ ஸ்க்ரீன் டைம் விட்ஜெட்டையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இதன் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் அவர்கள் வாய்ஸை பயன்படுத்தி பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தலாம், இதற்கு அவர்கள் செய்யவேண்டியது "Hey Google, pay for parking" என்று கூறுவது தான்.  இது கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் பே உதவியுடன் செயல்படுகிறது.  டிஜிட்டல் அசிஸ்டண்ட் அதிகளவில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, இருப்பினும் இது எளிதில் பணம் செலுத்த உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி?


இதில் உங்களுக்கு பணம் பற்றிய கவலையோ, குழப்பமோ தேவையில்லை. உங்கள் பார்க்கிங் நிலையை சரிபார்க்க அல்லது அதிக வாகன பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தும் நிலை ஏற்படும்போது 'ஓகே கூகுள், பார்க்கிங் ஸ்டேட்டஸ்' மற்றும் 'ஓகே கூகுள், எக்ஸ்டெண்ட் பார்க்கிங்' என்று சொன்னால் போதுமானது. 
பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்த கூகுள் அசிஸ்டண்ட்டைக் கேட்டதும், உங்களது திரையில் கூறப்படும் சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.  



ஆனால் இந்த அம்சமானது தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் இல்லை என்பது வருத்தமளிப்பதாக உள்ளது, இது தற்போது அமெரிக்காவில் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது.  இந்த அம்சத்தை விரைவில் செயல்படுத்தும் வகையில் இந்நிறுவனம் பார்க் மொபைல் உடன் கூட்டணி அமைத்துள்ளது.  இதுகுறித்து கூகுள் கூறுகையில், 'இந்த அம்சம் அமெரிக்காவில் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள பார்க்மொபைல் ஸ்ட்ரீட் பார்க்கிங் சோனில் மட்டுமே உள்ளது" என்று கூறுகிறது. இனிவரும் காலங்களில், கூகுள் பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த அம்சத்தை அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு 12 ஸ்மார்ட்போன்களும், அவற்றை பாதிக்கும் டர்ட்டி பைப்பும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR