இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தளங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கிக்கொண்டே இருக்கிறது.  அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களுக்கு வித்தியாசமான முறையில் பதிலளிக்கும் அம்சத்தை வழங்கியுள்ளது.  மெட்டாவிற்கு சொந்தமான இந்த தளமானது பதிலளிப்பதை இரண்டு வழிகளில் செய்ய அனுமதிக்கிறது அதில் ஒருமுறை படங்களை பயன்படுத்தி பதிலளிக்கலாம்,  இரண்டாவது முறையானது வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கலாம்.  இந்த அம்சமானது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் என அனைவருக்கும் செயல்படும்.  மேலும் இந்த அம்சங்கள் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க |Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?


இந்த செய்தியினை சாஃப்ட்வேர் டெவலப்பர் அலெஸாண்ட்ரோ பலுஸி என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் ஸ்டோரிகளுக்கு பதிலளிக்கும் பகுதி காண்பிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலே எமோஜிகள் உள்ளது, கீழே மெசேஜ் செய்யும் பகுதி உள்ளது அதனருகில் பட ஐகான் ஒன்று உள்ளது.  இதனை மூலம் வாடிக்கையாளர்கள் மொபைலில் கேலரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பதிலளிக்கலாம், அந்த ஐகானை தொடர்ந்து பக்கத்தில் GIF அனுப்புவதற்கான ஆப்ஷன் உள்ளது.  மேலும் அவர் பகிர்ந்துள்ள இரண்டாவது ஸ்க்ரீன்ஷாட்டில் படம் அனுப்புவதற்கான ஆப்ஷன் இருந்த இடத்தில மைக் ஐகான் உள்ளது, இதன் மூலம் ஸ்டோரிகளுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் பதிலளிக்கலாம்.


இவ்வாறு வாய்ஸ் மெசேஜ் செய்யும் ஆப்ஷனில் ஏதேனும் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்படுமா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.  இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகளுக்கு பதிலளிக்க அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த அம்சமானது ஏற்கனவே நேரடியாக நாம் மெசேஜ் செய்யும் பகுதியில் உள்ளது.  மெசேஜ் செய்யும்போது நாம் மற்றவருக்கு GIFகள், புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பலாம்.  இருப்பினும் ஸ்டோரிகளுக்கு படங்கள் மற்றும் வாய்ஸ் மெசஜ்கள் மூலம் பதிலளிக்கும் அம்சம் எப்போது வரும் என்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த தகவல் வரும்வரை பழையபடியே பயனர்கள் மெசேஜ் மூலமாகவோ அல்லது ரியாக்ட் செய்வது மூலமாகவோ பதிலளிக்கலாம்.  இவ்வாறு மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வாட்ஸ் அப்பிலும் விரைவில் வர உள்ளது, மேலும் இது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு உள்ளதாகவும்  கூறப்படுகிறது.  வாட்ஸ் அப் பீட்டா பயனாளர்களாக இருப்பவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தியிருக்கலாம்.


மேலும் படிக்க | நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR