நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?

ஒருவரது மொபைல் நம்பரை நமது மொபைலில் சேவ் செய்யாமலேயே நம்முடைய வாட்ஸ்அப்பில் இருந்து அவருக்கு மெசேஜ் அனுப்பலாம்.    

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2022, 01:19 PM IST
  • வாட்ஸ்அப் பயனர்கள் எண்ணைச் சேமிக்காமல் செய்திகளை அனுப்பலாம்.
  • சேமிக்கப்படாத நம்பரை தொடர்பு கொள்ள நேரடி வழிகள் இல்லை.
  • குறுக்குவழியை பயன்படுத்தியே இவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்.
நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி? title=

வாட்ஸ்அப் ஒரு பிரபலமான சேட்டிங் செயலியாகும், இது மெசேஜ்களை எளிதாக அனுப்ப பயன்படுவதோடு புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் முக்கியமான ஃபைல்கள் போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது,  மேலும் இது மில்லியன் கணக்கான பயனர்களால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படுகிறது.  சில சமயங்களில் வாட்ஸ்அப்பில் தெரியாத நபரை தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் வரும்.  பொதுவாக ஒருவரது மொபைல் நம்பரை வாட்ஸ்அப்பில் சேவ் செய்தால் நம்மால் அவருக்கு மெசேஜ் செய்யமுடியும்.

மேலும் படிக்க | Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?

 

ஒரு சிலரை ஒரு சிறிய வேலைக்காக வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள நேரிடும்போது, அவர்களின் எண்ணை மொபைலில் சேமிக்காமல் மெசேஜ் செய்யமுடியாது, இது சில சமயங்களில் எரிச்சலடைய செய்யும்.  மேலும் தெரியாத நபரின் நம்பரை நமது மொபைலில் சேவ் செய்தால் அந்த நபர் நமது ஸ்டேட்டஸ் மற்றும் புரொபைல் படத்தையும் பார்க்க முடியும்.  இது சிலரின் தனியுரிமைக்கு தொந்தரவாக கருதப்படுகிறது.   இந்த மெசேஜிங் செயலியானது பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியபோதிலும் இதில் சில முக்கியமான அம்சங்கள் இல்லாதது அதிருப்தியை அளிக்கிறது.

அவ்வாறு அதிருப்தி அளிப்பதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மொபைல் நம்பரை சேவ் செய்தால் தான் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யமுடியும் என்பது.  அதேசமயம் சில வழிகளை பயன்படுத்தி ஒருவரது மொபைல் நம்பரை சேமிக்காமல் அவருக்கு நம்மால் மெசேஜ் செய்ய முடியும்.  ஆனால் இதனை நேரடியாக செய்ய முடியாது, சில குறுக்கு வழிகளை பயன்படுத்தினால் மட்டுமே செய்யமுடியும்.  இவ்வாறு மொபைலில் நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எளிமையான ஒன்றாகும், இதனை குறைந்தது 1 நிமிடத்திற்குள்ளேயே செயல்படுத்திவிடலாம்.  பின்வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த செயல்முறையை உங்களால் பயன்படுத்த முடியும்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பிரவுசரை திறந்து அதில் "https://wa.me/phonenumber" என்று டைப் செய்யவேண்டும்.  இந்த URL-ஐ அப்படியே காபி செய்யாமல் போன் நம்பர் என்கிற இடத்தில உங்களது நம்பரை பதிவிட வேண்டும்.  உதாரணமாக “https://wa.me/9361661924” என்று இருக்க வேண்டும்.  அடுத்ததாக அதில் ஒரு பச்சை நிற பெட்டி தோன்றும், அதில் “continue to chat" என்று வரும், அதனை க்ளிக் செய்த பிறகு உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டிற்கு நீங்கள் சென்றுவிடுவார்கள்.

மேலும் படிக்க | இந்த ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே டெலீட் செய்யவும்!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News