UPI Transaction Limit: இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், செல்போன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், லட்சக்காணக்கானோர் பயன் பெறும் வகையில், UPI ஐப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கான உச்ச வரம்பை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுபிஐ செயலியில் சில குறிப்பிட்ட பரிவர்த்தனையில், ரூபாய் 5 லட்சம் வரையில் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய UPI பரிவர்த்தனை வரம்பு வரி செலுத்துதல், மருத்துவமனை கட்டணம் உள்ளிட பரிவர்த்தனைகள், கல்வி நிறுவனங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைகள், ஐபிஓக்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடித் திட்டங்கள் உள்ளிட்ட பிற பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். இந்த புதிய விதி செப்டம்பர் 16 முதல் அமல்படுத்தப்படுகிறது


கடந்த 2024 ஆகஸ்ட் 8ம் தேதி, வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கை அறிக்கைக்கு இணங்க, வரி செலுத்துவதற்கான UPI பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை மிகவும் வசதியாக மேற்கொள்ள இது உதவும். இந்த முடிவு வரி செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதோடு, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு UPI  செயலியைப் பயன்படுத்த அதிக அளவிலான மக்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை... ஸ்மார்போன், டிவிக்களுக்கு 80% வரை தள்ளுபடி


யுபிஐ பரிவர்த்தனைக்கான அதிகரிக்கப்பட்ட வரம்பு குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய UPI வரம்பு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐபிஓக்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடித் திட்டங்கள் உள்ளிட்ட பிற பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். எனவே, பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தில் கொள்ள கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மற்றும் UPI செயலிகள் புதிய வரம்புகளுடன் பொருந்துமா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.


பல்வேறு கட்டணங்களுக்கான UPI பரிவர்த்தனை வரம்புகள்


பியர்-டு-பியர் (peer-to-peer) பேமெண்ட்டுகளுக்கான நிலையான UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம். இருப்பினும், தனிப்பட்ட வகையில் வங்கிகள் தங்கள் UPI வரம்புகளை நிர்ணயிக்கலாம். எடுத்துக்காட்டாக, அலகாபாத் வங்கியின் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.25,000. அதே சமயம், HDFC மற்றும் ICICI போன்ற வங்கிகள் ரூ.1 லட்சம் வரையிலான UPI பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. மேலும், UPI செயலிகளுக்கென தனிப்பட்ட பரிவர்த்தனை வரம்பு இருக்கலாம். அவை இயங்குதளங்களை பொறுத்து மாறுபடும்.


பல்வேறு வகையான பிற UPI பரிவர்த்தனைகளுக்கும் வரம்புகள் உள்ளன. மூலதனச் சந்தைகள், காப்பீடு மற்றும் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்புதல் தொடர்பான UPI பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் வரை என்ற வரம்பைக் கொண்டுள்ளன.


UPI பரிவர்த்தனை வரம்புகளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய மாற்றங்கள்


NPCI டிசம்பர் 2021 மற்றும் டிசம்பர் 2023 ஆகிய இரண்டிலும் UPI பரிவர்த்தனை வரம்புகளை மாற்றி அமைத்தது. வரி செலுத்துதல் உட்பட பல்வேறு துறைகளில் UPI செயலி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது


UPI வட்டம் அம்சம் அறிமுகம்


புதிய அம்சம், "UPI வட்டம்", முதன்மை UPI கணக்கு வைத்திருப்பவர்கள் நம்பகமான நபர்களுக்கு பரிவர்த்தனைகளை வழங்குவதற்கு உதவுகிறது, இது பாதுகாப்பு மற்றும் வசதி இரண்டையும் மேம்படுத்துகிறது.


மேலும் படிக்க | Itel Color Pro 5G... 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்ட்போன்...முழு விபரம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ