இண்டர்நெட் இல்லாமலும் UPI சேவையை பயன்படுத்தலாம்... இதை செய்தால் போதும்

இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில் பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் யுபிஐ பேமெண்ட் சேவை தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கையில் ரொக்க பணம் வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு இல்லை. கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.

இன்டர்நெட் வசதி இல்லாமலும் கூட, UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இன்டர்நெட் அல்லது இணையம் இல்லாத UPI பரிவர்த்தனையை செய்வது எப்படி என்பதை அறிந்து தெரிந்து கொள்ளலாம்.

1 /8

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு இணைய வசதி அவசியம் என்றாலும், இணையம் இல்லாமலும் UPI பணம் செலுத்துவதற்கான ஆஃப்லைன் முறையும் பயன்பாட்டில் உள்ளது. இன்டர்நெட் சேவை வேலை செய்யாமல், கட்டணத்தை செலுத்த முடியாமல் சிக்கலை சந்திக்கும் சமயத்தில், இந்த முறை கைகொடுக்கும்.

2 /8

உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து *99# என்ற USSD அதிகாரப்பூர்வ குறியீட்டை டயல் செய்தால் போதும், நீங்கள் எளிதாக பரிவர்த்தனை செய்யலாம். இந்த சேவையை NPCI தொடங்கியுள்ளது. இந்த சேவை இணையம் இல்லாமல் கூட பணம் பணம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது. 

3 /8

USSD குறியீடு: வங்கிகள் வழங்கும் *99# சேவையானது, வங்கிகளுக்கு இடையே நிதிகளை அனுப்புதல் மற்றும் பெறுதல், கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் மற்றும் UPI பின்னை அமைப்பது அல்லது மாற்றுதல் போன்ற பல்வேறு வங்கிச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. 

4 /8

UPI பரிவர்த்தனை: உங்கள் இணைய இணைப்பு செயலிழந்தால் கவலை வேண்டாம். *99# சேவை பயன்படுத்தி இணையம் இல்லாமல் . UPI பரிவர்த்தனை செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

5 /8

ஆஃப்லைன் சேவைகள் விபரம்: உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99# ஐ டயல் செய்தால், வங்கிகள் கொடுக்கும் வசதிகளின் மெனு தோன்றும். அதில், பணம் அனுப்பு, பணம் பெறுதல், கணக்கில் உள்ள இருப்பு, எனது பிரொஃபைல், பெண்டிங் ரெக்வஸ்ட், பரிவர்த்தனைகள், UPI பின் என்ற ஆப்ஷன்கள் தோன்றும்.

6 /8

பயனாளி விபரம்: பணம் அனுப்ப, '1' என டைப் செய்து 'அனுப்பு' என்பதைத் தட்டவும். பின்னர் பிறகு நீங்கள் பணம் அனுப்ப வேண்டிய பயனாளியின் மொபைல் எண், UPI ஐடி ஆகியவற்றை தட்டச்சு செய்து 'அனுப்பு' என்பதைத் தட்டவும்.

7 /8

மொபைல் எண் விபரம்: நீங்கள் மொபைல் எண் மூலம் பரிமாற்றம் செய்ய விரும்பினால், பெறுநரின் UPI கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு 'அனுப்பு' என்பதைத் தட்டவும்.

8 /8

UPI பின் எண்: நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு 'அனுப்பு' என்பதைத் தட்டவும். பரிவர்த்தனையை முடிக்க உங்கள் UPI பின்னை உள்ளிடவும். உங்கள் UPI பரிவர்த்தனை ஆஃப்லைனில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும்.