புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில், பல அற்புதமான ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வந்துள்ளன, இதனால் மக்களுக்கு நிறைய ஆப்ஷன்ஸ் உள்ளன. உலகின் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளைப் பற்றி பேசினால், ஆப்பிள் என்ற பெயர் கண்டிப்பாக எடுக்கப்படும். நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த செய்தியை படிக்கவும். ஐபோன் 12 இல் ஒரு சிறந்த சலுகையைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம், இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் 28 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடியைப் பெறலாம். இந்த அற்புதமான ஒப்பந்தத்தின் முழு விவரத்தைப் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் 12 இல் பெரிய தள்ளுபடி
ஐபோன் 12 இன் 64ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டைப் பற்றி இங்கு காண் உள்ளோம், இதன் ஒரிஜினல் விலை ரூ.65,900 ஆகும். ஆனால் அமேசானில் 17% தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 54,999க்கு விற்கப்படுகிறது, அதாவது ஐபோன் 12 இல் ரூ. 10,901 தள்ளுபடியைப் பெறுவீர்கள். இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது எச்.டி.எஃப்.சி வங்கி மில்லேனியா கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ.2,750 கேஷ்பேக் கிடைக்கும், இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,249 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | '27,000,000 mAh' உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் - 5,000 போன், TV, ஃபிரிட்ஜூக்கும் சார்ஜ் செய்யலாம்..!


எக்ஸ்செஞ்ச் ஆஃபர் உள்ளாது
இந்த ஐபோன் 12 ஒப்பந்தத்தில், உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.14,900 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த ஐபோன் 12 இன் விலை உங்களுக்கு ரூ.37,349 ஆக இருக்கும். அதாவது விற்பனைத் தள்ளுபடிகள், வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என மொத்தம் ரூ.28,551 தள்ளுபடியை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்.


ஐபோன் 12 அம்சங்கள்
ஐபோன் 12 இன் 128 ஜிபி ஆப்பிள் போனில், ஏ14 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோனில், இரட்டை பின்புற கேமரா உள்ளது. இவை இரண்டும் 12எம்பி சென்சார்கள் கொண்டவை.


செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 12எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 5ஜி சேவைகளை ஆதரிக்கும் இந்த ஆப்பிள் ஐபோன், 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இது இரண்டு சிம் கார்டுகளை போடக்கூடிய போன் ஆகும்.


விரைவான சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஐபோன் 12 ஐ வாங்கும்போது, ​​யூ.எஸ்.பி வகை-சி கேபிளும் இருக்கும். இந்த போனுக்கு ஒரு வருட வாரண்டியும் உண்டு.


மேலும் படிக்க | Flipkart அதிரடி: ரூ. 75,000 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 25,000-க்கு வாங்க சூப்பர் வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR