பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான தேவையும் ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் ஒகயா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் பிரிவில் நுழைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது அந்த நிறுவனம், தனது இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்களான Freedum LI-2 மற்றும் Freedum LA-2 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேட் இன் இந்தியா ஸ்கூட்டர்கள் ஓலா எஸ் 1 (Ola S1), பஜாஜ் சேதக் மற்றும் பிற மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சந்தையில் இறங்கும். 


விலை மற்றும் வண்ணம்
விலையைப் பொறுத்தவரை, இந்த ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை ரூ. 69,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 12 வண்ணங்கள் கிடைக்கின்றன. 


விவரக்குறிப்புகள்
ஸ்கூட்டரில் 250W BLDC ஹப் மோட்டார் உள்ளது. இது 48V 30Ah பேட்டரியால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70-80 கிலோமீட்டர் வரை ஓடும். அதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரம் ஆகும்.


ALSO READ: ஓலா மின்சார ஸ்கூட்டர் இரண்டே நாளில் சாதனை விற்பனை: அடுத்த முக்கிய தேதி இதுதான்


இந்த மின்சார ஸ்கூட்டரின் (Electrc Scooter) அதிகபட்ச வேகம் 25 கிமீ ஆகும். டிஜிட்டல் டிஸ்ப்ளே, டெலஸ்கோப்பிக் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன், மோனோஸ்கோபிக் ரியர் சஸ்பென்ஷன், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், ரிமோட் லாக்/அன்லாக், வீல் லாக், முன் பக்க டிஸ்க் பிரேக் மற்றும் பின் பக்க ரியர் பிரேக் ஆகிய அம்சங்கள் இந்த மின்சார ஸ்கூட்டரில் உள்ளன. 


ஒகயா Freedom LA2 ஸ்கூட்டரில் 250W BLDC ஹப் மோட்டார் மற்றும் 48V 28Ah VLRA (C20) பேட்டரி உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50-60 கிலோமீட்டர் வரை ஓடும். அதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8-10 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.  


இந்த மின்சார ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன், மோனோஸ்கோபிக் ரியர் சஸ்பென்ஷன், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், ரிமோட் லாக்/அன்லாக் மற்றும் வீல் லாக், முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க ரியர் பிரேக் ஆகிய அம்சங்கள் உள்ளன.


ALSO READ: Best Electric Scooters: வரவிருக்கும் நாட்களில் அறிமுகமாகவுள்ள மின்சார ஸ்கூட்டர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR