ஓலா மின்சார ஸ்கூட்டர் இரண்டே நாளில் சாதனை விற்பனை: அடுத்த முக்கிய தேதி இதுதான்
நிறுவனம் இப்போது விற்பனை செயல்முறையை நிறுத்தியுள்ள போதிலும், சரியாக தீபாவளி நேரத்தில், அதாவது நவம்பர் 1 ஆம் தேதி பர்சேஸ் விண்டோ மீண்டும் திறக்கும்.
புதுடெல்லி: ஓலா மின்சார ஸ்கூட்டர் அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறது. அதன் சமீபத்திய சாதனை குறித்து, ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை ட்வீட் செய்தார். ஓலா எஸ் 1 மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியை தாண்டியது என்று அவர் கூறினார்.
நிறுவனம் இப்போது விற்பனை செயல்முறையை நிறுத்தியுள்ள போதிலும், சரியாக தீபாவளி நேரத்தில், அதாவது நவம்பர் 1 ஆம் தேதி பர்சேஸ் விண்டோ மீண்டும் திறக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை, ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) அதன் மின்சார ஸ்கூட்டரின் விற்பனை செயல்முறையைத் தொடங்கியது. ஓலா மின்சார ஸ்கூட்டர்கள், ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது. முதல் நாளில், நிறுவனம் ரூ .600 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்களை விற்றது குறிப்பிடத்தக்கது.
"மின்சார வாகன சகாப்தத்தின் இரண்டாம் நாள் முதல் நாளை விட நன்றாக இருந்தது. இரண்டு நாட்களில், விற்பனையில், 1100 கோடியை கடந்துவிட்டோம். இனி விற்பனைக்கான தளம் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கும்" என்று அகர்வால் ஒரு ட்வீட்டில் கூறினார்.
ALSO READ: Ola Electric அசுர சாதனை: ஒரே நாளில் ரூ.600 கோடி விற்பனை!!
வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர்களுக்கு காட்டிய உற்சாகமும் ஆதரவும் மிகவும் அதிகமாக இருந்ததாக ஒரு வலைப்பதிவு இடுகையில் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
"மொத்தம் 2 நாட்களில், நாங்கள் ரூ .1,100 கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளோம்! இது வாகனத் துறையில் முன்பு எப்போதும் காணப்படாத ஒரு விஷயமாகும். இந்திய ஈ-காமர்ஸ் வரலாற்றில், ஒரு பிராடெக்டுக்கு ஒரே நாளில் (மதிப்பின் அடிப்படையில்) நடந்துள்ள அதிகபட்ச விற்பனையாகும் இது. நாம் நிஜமாகவே டிஜிடல் இந்தியாவில்தான் வாழ்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் (Ola Electric Scooter) விற்பனை 8 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக விற்பனை ஒரு வாரத்திற்கு, அதாவது செப்டம்பர் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இ-ஸ்கூட்டர் தற்போது ஓலா செயலியில் மட்டுமே கிடைக்கிறது, இணையதளத்தில் விற்பனை இன்னும் நடக்கத் தொடங்கவில்லை.
ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை 8 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக விற்பனை ஒரு வாரத்திற்கு, அதாவது செப்டம்பர் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இ-ஸ்கூட்டர் தற்போது ஓலா செயலியில் மட்டுமே கிடைக்கிறது, இணையதளத்தில் விற்பனை இன்னும் நடக்கத் தொடங்கவில்லை.
அக்டோபர் 2021 முதல் ஸ்கூட்டர்களின் வினியோகம் தொடங்கும். வாங்கிய 72 மணி நேரத்திற்குள் தோராயமான தற்காலிக டெலிவரி தேதிகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஓலா (Ola) நிறுவனம், ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ என்ற தனது மின்சார ஸ்கூட்டரின் இரண்டு வகைகளை ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை முறையே ரூ .99,999 மற்றும் ரூ .1,29,999 ஆகும் (எக்ஸ்-ஷோரூம் ஃபேம் II மானியம் மற்றும் மாநில மானியங்கள் தவிர).
ALSO READ: Ola Electric ஸ்கூட்டர் S1 விற்பனை இன்று முதல் துவக்கம்; முழு விவரம் இங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR