செயலி அடிப்படையில் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஓலா, மின்சார வாகனங்களுக்காக ஒரு பெரிய திட்டத்தை தயாரித்துள்ளது. நிறுவனம் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த திட்டத்தில் நிறுவனம் வேகமாக செயல்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல நகரங்களில், குறுகிய வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் போவது கடினமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஓலாவின் இந்த புதிய ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் பயணத்தை எளிதாக்கும்.


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்


நியூசிலாந்தில் (Newzealand) முதலில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தப்போவதாக ஓலா தெரிவித்தது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 64,000 புதிய மின்சார வாகனங்களை சாலையில் செலுத்தும் இலக்கை அடைய இது நியூசிலாந்து அரசாங்கத்திற்கு உதவும் என்றும், அதே நேரத்தில் இதன் மூலம் மாசுபாடு குறையும் என்றும் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த 6 முதல் 9 மாதங்களில் நியூசிலாந்தில் ஓலாவின் புதிய மின்சார இருசக்கர வாகனங்கள் முழுமையாக இயங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த மாத வரலாம்


ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicle) விரைவில் சாலையில் காணப்படும். ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் இந்த அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து பல்வேறு யூகங்கள் எழுப்பப்படுகின்றன.


ALSO READ: தமிழகத்தின் 6 நகரங்களில் Electric Vehicle charging நிலையங்கள் அமைக்கப்படும்: TN Govt


ஓலா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்


ஓலாவின் உற்பத்தி ஆலைகள் இந்தியாவில் அமைக்கப்படும். மேலும் மேட் இன் இந்தியா மின்சார ஸ்கூட்டர்கள் மக்களின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை இயக்க முடியும் என்று ஓலா கூறுகிறது.


ஓலா மின்சார கார்களைக் கொண்டுவரும்


இந்தியாவில் கார் சேவையை வழங்கும் முதன்மை நிறுவனமான ஓலா, மின்சார நான்கு சக்கர வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, ஓலா இந்தியாவில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Ola Electric Scooter) எதிர்வரும் நாட்களில் அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. இதனால் இந்தியர்கள் மலிவான வாகனங்கள் மற்றும் மலிவான வாகனங்களை மின்சார இயக்கத்துடன் பெற முடியும்.


ஓலாவின் பெரிய திட்டங்கள்


இந்தியாவில் மின்சார 4 சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது. இதனால் அதன் சந்தை மேலும் விரிவடையும். மேலும், வரும் நாட்களில் மின்சார கார்கள் மூலம் சிறிய நகரங்களை அடைவதற்கான திட்டங்களில் ஓலா செயல்பட்டு வருகிறது. ஓலாவின் மின்சார நான்கு சக்கர வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பஜாஜின் வரவிருக்கும் நான்கு சக்கர வாகனமான Bajaj Qute electric, மஹிந்திராவின் Mahindra Atom electric மற்றும் டாடா (Tata) மற்றும் டிவிஎஸ்-சின் நான்கு சக்கர வாகனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும். 


ALSO READ: Electric பைக்குகளை விரைவில் டெலிவர் செய்ய Hero என்ன செய்கிறது தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR