ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு
சட்டவிரோதமாக அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆட்டோ வாகன சேவைகளை அடுத்த மூன்று நாள்களுக்குள் நிறுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மொபைல் ஆஃப்கள் மூலம் அளிக்கப்படும் ஆட்டோ வாகன சேவைகளுக்கு அடுத்த மூன்று நாள்களுக்குள் தடை விதிக்க உள்ளதாக கர்நாடக அரசின் போக்குவரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆஃப்கள் மூலம் இயங்கும் ஆட்டோ சேவைகள் நிறுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கக் கூடாது".
குறைந்த தூரங்களுக்கும், இந்த ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் மூன்று நாள்களுக்குள், அரசு நிர்ணயித்த தொகைக்கு ஏற்ப, ஆன்லைன் ஆட்டோ சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
பயணத்தின் முதல் 2 கி.மீக்கு 30 ரூபாயும், அதன் பிறகு கி.மீக்கு 13 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு விலை நிர்ணயித்துள்ளது. ஆனால், தற்போது, இந்த ஆன்லைன் ஆட்டோ நிறுவனங்கள் 2 கி.மீக்கு குறைவான தூரத்திற்கு 100 ரூபாயை வசூலிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மொபைல் ஆஃப் மூலமான ஆட்டோ சேவைகளை அளித்தால், அது சட்டவிரோதம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகியவை சொந்தமாக ஆட்டோக்களை இயக்க முடியாது. டாக்சிகள் மட்டும் இயங்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ