ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்தந பிராண்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்துள்ளது. OnePlus 11R சோலார் ரெட் 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 18 ஜிபி ரேம் கொண்ட தொலைபேசி மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. OnePlus -ன் சிவப்பு நிறத்தில் இந்த மொபைல் ஸ்டைலாகத் தெரிகிறது. வாடிக்கையாளர்களின் பிடியை மேம்படுத்த லெதர் பேக் பேனலுடன் வருகிறது. மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த மொபைல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு... முன்பதிவு தேதி அறிவிப்பு


OnePlus 11R சோலார் ரெட் இந்தியாவில் அறிமுகம்


ஒன்பிளஸ் தனது இணையதளத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வருகையை அறிவித்திருக்கிறது. அக்டோபர் 7 ஆம் தேதி இந்திய சந்தைகளில் வரும் என்பது ஒன்பிளஸ் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் வெளிப்படுத்துகிறது. ஒன்பிளஸ் லேண்டிங் பக்கத்தில் ஒரு சிறிய நோட்டிஃபை மீ பட்டன் உள்ளது. அதைக் கிளிக் செய்தால், ஒன்பிளஸ் மொபைலின் புதிய அறிமுகம் தொட்ரபான அறிவிப்பை பெறுவீர்கள்.


தொலைபேசியின் வெளியீடு Flipkart-ன் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இடம்பெறுகிறது. இரண்டு இ-காமர்ஸ் தளங்களும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பல்வேறு எலக்ட்ரானிக் கேஜெட்களில் அற்புதமான சலுகைகளை வழங்குகின்றன.


OnePlus 11R சோலார் ரெட்: சிறந்த விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்


ஒன்பிளஸ் 11ஆர் சோலார் ரெட் ஆனது, ஒன்பிளஸின் சின்னமான சிவப்பு நிறத்தில் லெதர் பேக் ஃபினிஷுடன் வருகிறது. ஃபாக்ஸ் லெதர் ஃபினிஷ் பயனர்களுக்கு சிறந்த பிடியை ஏற்படுத்தும் என்று உறுதியளிக்கிறது. ஃபோன் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. 18ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஃபோன், செயல்திறனுக்கு வரும்போது மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது.


ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 11 சீரிஸிலிருந்து பெறப்பட்ட அதிநவீன ரேம்-விட்டா தொழில்நுட்பத்தால் இந்த ஃபோன் இயக்கப்படுகிறது. 16ஜிபி பதிப்பின் 44-ஆப்ஸ் வரம்பை மீறி, ஒரே நேரத்தில் 50 ஆப்ஸ் வரை ஃபோன் சீராக இயங்க முடியும் என்று OnePlus கூறுகிறது. கேமிங் விளையாட்டாளர்களுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது. கேமிங்கின் போது வரவிருக்கும் ஃபோன் ஒரு வினாடிக்கு சராசரியாக 59.46 ஃப்ரேம்களை பராமரிக்கும் என்று OnePlus கூறுகிறது. பேட்டரியைப் பற்றி பேசுகையில், ஃபோன் பெரிய 5000mAh பேட்டரி மற்றும் 100W SUPERVOOC சார்ஜருடன் வருகிறது. வெறும் 25 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை ஃபோன் சார்ஜ் செய்ய முடியும் என்று ஒன்பிஸ் பிராண்ட் கூறுகிறது.


மேலும் படிக்க | மொபைல் பழசாகிடுச்சா... அக்டோபரில் அம்சமா அறிமுகமாகும் 5 ஸ்மார்ட்போன்கள் - இதை பாருங்க! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ