OnePlus 9R  Sale: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! OnePlus 9R இன்று முதல் இந்தியாவில் சிறப்பு விற்பனைக்கு (Sale) வருகிறது. சேலில், இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைனில் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் மற்றும் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போனை OnePlus 9 தொடருடன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனிலும் ஒன்பிளஸ் 9 போன்ற அம்சங்களே கிடைக்கின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனில் சிறிய மாற்றங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் மற்றும் 5G இணைப்புடன் கிடைக்கிறது. 



இந்தியாவில் OnePlus 9R-ன் விலை


OnePlus 9R ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .39,999 ஆகும். 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட வகைக்கு இந்த விலை நிர்ணயிக்கப்படுள்ளது. 122GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ .43,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும். 


ALSO READ: 20 mins-ல் full charge, முழு வாரம் ஓடும்: அறிமுகமாகிறது அட்டகாசமான Oneplus Smartwatch


Amazon.in, OnePlus.in மற்றும் ஒன்ப்ளஸின் ஆஃப்லைன் கடைகளிலிருந்தும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் இந்த ஸ்மார்ட்போனில் 2000 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், இதில் நோ காஸ்ட் EMI மற்றும் Jio-வின் சலுகைகளும் கிடைக்கின்றன. 


விவரக்குறிப்புகள்


OnePlus 9R ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 11 இல் இயங்குகிறது. தொலைபேசியில் 6.5 இன்ச் Full-HD+ (1,080×2,400 pixels) OLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் இந்த தொலைபேசியில் கிடைக்கிறது. 12GB ரேம் வரையிலான ஆப்ஷன் இதில் கிடைக்கிறது. 


இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் பிரதான லென்ஸ் 48MP-ஐக் கொண்டுள்ளது. இது தவிர, தொலைபேசியில் 162MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP மோனோக்ரோம் ஷூட்டர் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 16MP கேமரா உள்ளது. இதில் 256GB வரையிலான ஸ்டோரேஜும் கிடைக்கிறது. இணைப்பிற்கு, இதில் 5G, 4G LTE, வைஃபை 6, புளூடூத் v5.1, GPS/ A-GPS, NFC ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி இண்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது.  தொலைபேசியில் 4500mAh பேட்டரி உள்ளது. இது 65W சார்ஜிங்கை ஏதுவாக்குகிறது. 


ALSO READ: OnePlus-ன் மிகவும் மலிவான ஸ்மார்ட்ஃபோன் விரைவில் அறிமுகம்: அட்டகாசமான அம்சங்கள் இதோ


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR