அச்சு அசலாக iPhone 13 போல் இருக்கும் OnePlus புதிய போன் அறிமுகம்: விவரம் இதோ
இந்த போனின் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதை பின்புறத்திலிருந்து பார்த்தால், இது அச்சு அசல் ஐபோன் 13 போல் தெரிகிறது.
OnePlus Nord N20 5G: OnePlus நிறுவனம் OnePlus Nord N20 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் வெளியாகியுள்ளன.
இது ஒரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதில் பல சிறப்பான அம்சங்கள் இருக்கும். இந்த போனின் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதை பின்புறத்திலிருந்து பார்த்தால், இது அச்சு அசல் ஐபோன் 13 போல் தெரிகிறது. இந்த தொலைபேசியின் பின்புறம் தட்டையாக உள்ளது. இதன் கேமரா மாட்யூல் ஐபோன் போல் உள்ளது. OnePlus Nord N20 5G பற்றிய சிறப்பம்சங்களை இந்த பதிவில் காணலாம்.
OnePlus Nord N20 5G ஐபோன் 13 ஐப் போலவே உள்ளது
புதிய சேஸ் பிளாக்கி, மற்றும் தட்டையான பக்கங்கள் ஐபோன் 13 இன் (iPhone 13) அலுமினிய மூலைகளை ஒத்திருக்கிறது. பின்புற வடிவமைப்பும் மாறியுள்ளது. ஒற்றை கேமரா ஐலேண்டிற்கு பதிலாக, கைபேசியில் மூன்று தனித்தனி கேமரா லென்ஸ்கள் உள்ளன.
ALSO READ:Cheap and Best: அதிரடி அம்சங்கள், அடக்கமான விலை கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
OnePlus Nord N20 5G: விவரக்குறிப்புகள்
OnePlus Nord N20 5G சிப்செட் ஸ்னாப்டிராகன் 695 5ஜிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே இப்போது 6.43-இன்ச் AMOLED ஆல் ஆனது. அதற்குக் கீழே ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் உள்ளது. இதன் பின்புற கேமரா அமைப்பும் மாறிவிட்டது. ஆனால் அது மேம்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
OnePlus Nord N20 5G: கேமரா
முன்பக்கத்தில் 16எம்பி செல்பி ஷூட்டர் உள்ளது. N10 ஆனது 2MP டெப்த் சென்சார்க்கு பதிலாக அல்ட்ராவைட் கேமராவைக் கொண்டிருந்தது. OnePlus Nord N20 5G சந்தைக்கு வர இன்னும் சில நாட்கள் உள்ளன. ஆகையால் சிறிது சிறிதாகத்தான் தொலைபேசியின் (Mobile Phone) அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
ALSO READ: Amazon Offer: ரூ. 500-க்கும் குறைவாக கிடைக்கிறது அட்டகாசமான Redmi 9 ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR