இந்தியாவில் OnePlus நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியாக OnePlus TV 40Y1 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த புதிய OnePlus ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தற்போதுள்ள 32 அங்குல மற்றும் 43 அங்குல ஒய்-சீரிஸ் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OnePlus TV 40Y1 மாடலானது முன்னதாக வெளியான 43 இன்ச் மாடலுடன் பல அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது. அதாவது காமா எஞ்சின், கன்டென்ட் கண்டுபிடிப்புக்கான ஆக்ஸிஜன் பிளே, ஆண்ட்ராய்டு டிவி 9.0, கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் எளிதான தேடலுக்கான அலெக்சா (Alexa), டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்றவைகளை கொண்டுள்ளது.


ALSO READ | OnePlus 9R 5G: அதிரடி தள்ளுபடியுடன் இன்று விற்பனை துவக்கம், டிரெண்டாகும் #OnePlus9R52G


இது தவிர, இந்த டிவி இல் உடனடி தள்ளுபடியை Flipkart வழங்கியுள்ளது, HDFC வங்கி கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியை OnePlus TV 40Y1 இல் பெறலாம். ஒன்பிளஸ் டிவி 32 ஒய் 1 ரூ .15,999 க்கும், ஒன்பிளஸ் டிவி 43 ஒய் 1 ரூ .26,999 க்கும் கிடைக்கிறது. ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 மாடல் அறிமுகத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இது சியோமியின் மி டிவி, நோக்கியா டிவி, ரியல்மி டிவி மற்றும் பலவற்றை எதிர்க்க வேண்டும் என்பதே ஆகும்.


புதிய 40 இன்ச் ஒன்பிளஸ் டி.வி ஆனது அனைத்து மூலைகளிலும் மெலிதான பெசல்களைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி 40 ஒய் 1 இந்தியாவில் ரூ.21,999 என்கிற அறிமுக விலைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக மே 26, நண்பகல் 12 மணி முதல் மற்றும் ஒன்பிளஸ் இணையதளத்தில் ஜூன் 1 முதல் விற்பனைக்கு வரும்.


ஒன்பிளஸ் வலைத்தளமானது எஸ்பிஐ கார்டுடன் ரூ.1,000 தள்ளுபடியை வழங்கும். மேலும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் அணுக கிடைக்கும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR