ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றாலும், எந்த தேதி என்பதை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், அடுத்த மாதம் இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுக்கு வருகிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதியதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் நோர்டு ஸ்மார்ட்போன், முக்கிய இடத்தை பெறும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரூ.374 -க்கு விற்பனையாகும் Realme ஸ்மார்ட்போன் - உடனே முந்துங்கள்!


இந்த ஃபோன் MediaTek Dimensity 1300 சிப்செட் மூலம் இயக்கப்படும். OnePlus 10 Pro-வில் அறிமுகமான 80W SuperVooc மாற்றத்துடன் வரும் இந்த போனில் Oxygen OS 12 இடம்பெற்றிருக்கும். அதாவது Android 12 இயங்குதளத்தில் இயங்கும். வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த போனில் மாற்றம் ஏதும் செயப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டால், 6.43-இன்ச் 20:9 AMOLED ஸ்கிரீன், மற்றும் 1080 x 2400 தெளிவுத்திறனுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படும். 8ஜிபி+128ஜிபி மற்றும் 256ஜிபி+12ஜிபி என ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டுகளில் வெளியிடப்படுகிறது. 



OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா இருக்கும். 50MP f/1.9 முதன்மை சென்சார் கொண்ட கேமரா,  24mm-க்கு சமமான குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 8MP f2/2 அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2MP f/2.2 டெப்த் கேமராவையும் கொண்டுள்ளது. இது 30fps இல் 4k வீடியோவைப் பதிவுசெய்யும் திறன் கொண்டது. 


மேலும் படிக்க | ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் சாம்சங்க் 5ஜி ஸ்மார்ட்போன்


நிலையான படங்களுக்கான HDR மற்றும் பனோரமா முறைகளைக் கொண்டுள்ளது. சென்சார்களில் அண்டர் டிஸ்ப்ளே ஆப்டிகல் கைரேகை ரீடர், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் திசைகாட்டி ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலையை OnePlus இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜூலை 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR