17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் வாங்க நீங்க ரெடியா?
17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் OnePlus ஸ்மார்ட்போன் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
OnePlus நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்வில், ஒன்பிளஸ் 10R,ஒன்பிளஸ் நோர்டு CE 2 லைட் உள்ளிட்ட அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் அறிமுகப்படுத்துகிறது. ஒன்பிளஸ் நோர்டு சிஇ லைட் 5 ஜி ஸ்மார்ட்போன், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வர இருக்கிறது,. 30 நிமிடங்களில் 50 விழுக்காடு சார்ஜ் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Nord CE 2 Lite சிறப்பம்சம்
நோர்டு சிஇ 2 Lite ஸ்மார்ட்போனில் 64MP டிரிபிள் கேமரா இருக்கும். மேலும், ஏப்ரல் 28 ஆம் தேதி Nord Buds உடன் வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) அறிமுகமும் இருக்கும் என தெரிவித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் நோர்டு சிஇ 2 Lite 5G ஸ்மார்ட்போன் 33W சார்ஜருடன் 5000mAh பேட்டரியைப் பெற்றிருக்கும் எனக் கூறியுள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 695 சிப்செட்டில் வரும் நோர்டு சிஇ 2 லைட் 8GB ரேம் இருக்கும். ஆன்டிராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும்.
மேலும் படிக்க | டிக்டாக்கை காலி செய்ய இன்ஸ்டாகிராம் பக்கா பிளான்
இதில் கூடுதல் அம்சம் என்னவென்றால், ஒன்பிளஸ் ஆடியோ அனுபவத்தை மேலும் சிறப்பாக கொடுக்கக்கூடியதாக இருக்கும். தெளிவான ஒலிக்கான 12.4mm பெரிய டைனமிக் பாஸ் டிரைவர்கள் இதில் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஒன்பிளஸ், ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை இயக்க முடியும் எனக் கூறியுள்ளது. ஒன்பிளஸ் 10R 5G மற்றும் நோர்டு சிஇ 2 Lite 5G ஸ்மார்ட்போன்கள் இயர்பட்ஸுடன் வெளிவர இருக்கின்றன. பிரீமியம் மற்றும் மிட் செக்மென்ட்டை குறிவைத்து களமிறங்கும் இந்த ஸ்மார்ட்போன் 10 ப்ரோவின் பதிப்பை போன்று இருக்கும்.
17 நிமிடங்களில் முழு சார்ஜ்
ஒன்பிளஸ் 10R மொபைல் போன் MediaTek Dimensity 900 மேக்ஸ் சிப்செட்டுடன் 150W பாஸ்ட் சார்ஜருடன் வரும். 4500mAh பேட்டரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், புதிய சார்ஜிங் தொழில்நுட்பதில் வருகிறது. இதனால், 17 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்ய முடியும் என ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் படிக்க | இந்திய அரசியலை புரட்டும் ’புல்டோசர்’ வரலாறு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR