ஒன்பிளஸ் மொபைல் அறிமுகம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் fold மாடல் போன் ஆனது வரும் அக்டோபர் மாதம் உலக முழுவதும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை, விவரக்குறிப்பு உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.  


Oneplus One Fold விவரக்குறிப்புகள்


Oneplus One ஸ்மார்ட்போன் உள்ளே 7.8″ 2K foldable 120Hz AMOLED டிஸ்பிளே மற்றும் வெளியே 6.3″ 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் Oxygen OS 13.1, Android 13 - ஐ ஆதரவு கொண்ட Snapdragon 8 Gen 3 SoC சிப்செட் கொண்டு இயங்குகிறது.


மேலும் படிக்க | முன்னாள் கூகுள் பணியாளர்... இப்போது உபேர் பைக் ஓட்டுநர் - பின்னணி என்ன?


ஒன்பிளஸ் மொபைல் கேமரா


கேமராவைப் பொறுத்த வரையில், 48எம்பி பிரைமரி கேமரா, 48எம்பி அல்ட்ரா வைடு, 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 32எம்பி மற்றும் 20எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா செட்டப் அளிக்கப்படும். 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும். 67 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 4800 எம்ஏச் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


புதிய மொபைலின் விலை


இத்தனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் Emerald Eclipse மற்றும் Voyage Black ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1.2 லட்சத்திற்கு அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில், இந்த போனின் முழு விவரத்தையும் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Whatsapp-க்கு ஆப்பு... X தளத்தில் வீடியோ, ஆடியோ கால் செய்வது எப்படி? - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ