முன்னாள் கூகுள் பணியாளர்... இப்போது உபேர் பைக் ஓட்டுநர் - பின்னணி என்ன?

பெங்களூருவில் உபேரில் பயணித்த ஒருவர் தனக்கு பைக் ஓட்டும் நபர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்ற கதையை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2023, 10:42 AM IST
  • அந்த அனுபவத்தை X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
  • இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அடிக்கடி புகழப்படும் நகரம் பெங்களூரு.
  • அங்கு தொழில்நுட்பம் குறித்த உரையாடல்கள்தான் நிரம்பியிருக்கும்.
முன்னாள் கூகுள் பணியாளர்... இப்போது உபேர் பைக் ஓட்டுநர் - பின்னணி என்ன? title=

பெங்களூரு என்று சொன்னலே, முன்பெல்லாம் அனைவரித்திலும் இருந்து 'குளிர்ந்த நகரம்' என்றுதான் பதில் வரும், இப்போது கேட்டால் அந்த ஊரின் டிராப்பிக்கைதான் அனைவரும் முதலில் கூறுவார்கள். பெங்களூரு டிராப்பிக்கை பற்றிய மீம்ஸ்களை நீங்களே சமூக வலைதளங்களில் அதிக முறை கடந்து வந்துருப்பீர்கள்.

வியப்பை தரும் சம்பவம்

ஆனால், இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அடிக்கடி புகழப்படும் நகரம் பெங்களூரு. அதன் அளவிற்கு அங்கு ஐடி நிறுவனங்கள் உள்ளன. பெங்களூருவில் பொதுவான உரையாடல்களில் சிக்கலான குறியீட்டு முறைகள், அல்காரிதம்கள் மற்றும் வெற்றியடைந்த ஸ்டார்ட்அப்கள் பற்றிய பேச்சுகள்தான் அதிகம் இருக்கும். மேலும், பெங்களூருவில் வீட்டை வாடகைக்கு எடுப்பதில் இருந்து உபேர், ஓலாவில் செல்வது வரை பல விசித்திர கதைகள் வெளியே வரும். 

அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த ராகவ் துவா என்பவர், அவரின் உபெர் சவாரியின் போது ஒரு அசாதாரண அனுபவத்தை பெற்றுள்ளார், இதனை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பெங்களூருவின் டிராப்பிக் நிறைந்த சாலைகளில் செல்ல உபேர் மோட்டோ (Bike Taxi) தான் சிறந்தது என ராகவ் பாராட்டியிருந்த நிலையில், அதே பதிவில்தான் அந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.  அதாவது, அவருக்கு உபேர் பைக் ஓட்டிக்கொண்டிருந்தவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று தெரிவித்தது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | கூகுளில் வேலை வாங்குவது ஈஸி... ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம் - மன வலியை பகிர்ந்த இளைஞர்!

எதற்கு தெரியுமா?

இருப்பினும் அவர் அந்த நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை. இருப்பினும், அந்த நபர் சமீபத்தில் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தார் எனவும் பெங்களூரு நகரத்தின் துடிப்புமிக்க உணர்வை ஆராய்வதற்காக அவர் உபெர் மோட்டோ மூலம் பைக் ஓட்டி வருகிறார் என்றும் ராகவ் தெரிவித்தார். அதாவது, பெங்களூரு மக்களை தெரிந்துகொள்ளும் பொருட்டு அந்த நபர் கூகுள் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். 

X தளத்தில் தனது வியப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட துவாவின் பதிவுக்கும் பல்வேறு கமெண்டுகள் குவிந்துள்ளன. "இது உண்மையிலேயே வியப்பானது! உங்கள் சவாரியின் போது நீங்கள் ஒரு சுவாரஸ்யமான உரையாடலைக் கொண்டிருந்தீர்கள் என்று நம்புகிறேன்!" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மற்றொரு நபர் நகைச்சுவையாக, "பெங்களூருவில், நீங்கள் எங்காவது கல்லை எறிந்தால், அது ஒரு பறவை அல்லது ஒரு மென்பொருள் பொறியாளரை தான் தாக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வைரல் பதிவு பெங்களூருவின் தனித்துவமான கவர்ச்சிக்கு சான்றாக உள்ளது, அங்கு தினசரி சந்திப்புகள் கூட நகரின் தொழில்நுட்ப ஆர்வத்தை காட்டுவதாக அமைகிறது.

மேலும் படிக்க | பச்சிளம் குழந்தைக்கு இவ்வளவு பெரிய பட்டப்படிப்பா... வாய்ப்பிளக்கும் மக்கள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News