30 லட்சம் பாஸ்ட் டேக்குகளை வினியோகம் செய்திருப்பதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தடுக்கும் வகையில், தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் (பாஸ்ட் டேக்) அமல்படுத்தப்பட்டது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த இடத்திலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக சுங்கச்சாவடிகளில் பிரத்தியேகமாக ‘பாஸ்ட் டேக்’ வழி உருவாக்கப்பட்டது. இதில், செல்வதற்கு ‘பாஸ்ட் டேக்’ கார்டை பயன்படுத்த வேண்டும். 


இந்த நிலையில் 30 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை வழங்கியிருப்பதாக வங்கியாக செயல்படும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 சதவீத பாஸ்ட்டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் மாதத்திற்கு இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் பேடிஎம் அறிவித்துள்ளது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.