மொபைல் கட்டண சேவைக்கு பிரபலமான Paytm, தற்போது ஆன்லைன் உணவு விற்பனையிலும் சாதனை படைக்க முன்வந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதனின் அடிப்படை தேவைகள் என பட்டியலிடப்படும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றினையும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் வீட்டின் வாசலுக்கே கொண்டு வந்து விடுகின்றன. இந்த நவீன சேவையினை செய்வதற்கு பல ஆன்லைன் விற்பனையாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த வகையில் இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை ஜாம்பவான், தனது ஆன்லைன் விற்பனையில் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளது.


மொபைல் ரீசார்ஜ், பொருட்கள் விற்பனை, கேஸ் சிலிண்டர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தும் வசதி என பல வசதிகளை வழங்கி ஆன்லைன் முகவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் Paytm தற்போது உணவு விற்பனையினையும் விட்டுவைக்கவில்லை. 



தலைநகர் டெல்லி., மும்பை, புனே, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் உள்பட இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும், ஆன்லைன் மூலம் உணவுப்பொருட்களை வீட்டிற்கு விநியோகிக்கும் வசதியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.


இந்த பயன்பாட்டினை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக கடந்த 6 மாதங்களாக Paytm குழு பணியாற்றி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த பயன்பாட்டினை Android இயங்குதளத்தில் நிகழலை செய்யப்பட்டது எனவும், விரைவில் iOS பயன்பாட்டர்களுக்கு நிகழலை செய்யப்படும் எனவும் Paytm தெரிவித்துள்ளது.


இந்த உணவு விநியோக வசதிக்ககா Paytm மற்றம் Zomato நிறுவனங்கள் கைகோர்த்து இருப்பதாக தெரிகிறது. இந்த இணைவு Swiggy, Food Panda போன்ற நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த வணிக, Zomato ஒரு தனிப்பட்ட கூட்டணி Swiggy, Uber Eats மற்றும் Ola (உணவுப்பந்தாட்டம் வழியாக) கூட கணக்கில் உள்ள நிறுவப்பட்ட பெயர்கள் நேரடி போட்டியில் செல்கிறது.