POCO M4 Pro 5G: POCO M4 Pro 5G பற்றிய அறிவிப்பு நவம்பர் 9 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒரு வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்படும். இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11 5G இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிமுகத்திற்கு முன்னதாக, வியட்நாமிய வெளியீடான ThePixel.vn, POCO M4 Pro 5G  இன் முதல் காட்சியை வழங்க படங்களைப் பகிர்ந்துள்ளது. போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. POCO M4 Pro 5G இன் அற்புதமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.


POCO M4 Pro 5G: வடிவமைப்பு


POCO M4 Pro 5G இன் வடிவமைப்பு சீனாவின் நோட் 11 ஐப் போன்றது. முன்பக்கத்தில், இது ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. கேமரா யூனிட்டுக்கு வழக்கமான ரெக்டாங்குலர் வடிவ மாட்யூல் உள்ளது. அருகில் Poco இன் பிராண்டிங்கும் உள்ளது.


ALSO READ: Flipkart Diwali Sale: வெறும் ரூ. 500-க்கு கிடைக்கிறது அட்டகாசமான POCO ஸ்மார்ட்போன் 


POCO M4 Pro 5G: விவரக்குறிப்புகள்


POCO M4 Pro 5G ஸ்மார்ட்போன் (Smartphone) ஆனது 6.6-இன்ச் IPS LCD பேனலைக் கொண்டுள்ளது. இது முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. சாதனத்தின் ஹூட்டின் கீழ் Dimensity 810 சிப்செட் உள்ளது. இது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு என மூன்று வகைகளில் கிடைக்கும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


POCO M4 Pro 5G கேமரா


POCO M4 Pro 5G ஆனது 16 மெகாபிக்சல் கேமராவைக் (Mobile Camera) கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் மற்றும் AI லோகோ ஆகியவை அடங்கும்.


POCO M4 Pro 5G பேட்டரி


POCO M4 Pro 5G ஆனது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது MIUI 12.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 உடன் முன்பே நிறுவப்பட்டிருக்கும். POCO M4 Pro 5G விலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. M4 Pro ஆரம்ப விலை 231 டாலராக (ரூ. 17,231) இருக்கலாம் என கூறப்படுகின்றது.


ALSO READ: Jio Phone Next: Whatsapp மூலம் முன்பதிவு செய்வது எப்படி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR