Jio-வின் அடுத்த புரட்சி: உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் JioPhone Next அறிமுகம்!!

இண்டர்நெட்டைத் தொடர்ந்து இப்போது ஸ்மார்ட்போன் புரட்சியை செய்யத் தயார் ஆகும் ஜியோ நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2021, 07:13 AM IST
  • Jiophone Next, மிக மலிவான விலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
  • இந்த தொலைபேசியை தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  • இது நாடு முழுவதும் அனைத்து ஜியோமார்ட் சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.
Jio-வின் அடுத்த புரட்சி: உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் JioPhone Next அறிமுகம்!! title=

புதுடில்லி: Jio மற்றும் Google சார்பில் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை  வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், தீபாவளி முதல், Jiophone Next, ரூ. 6,499 என்ற மிக மலிவான விலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த போனை நிறுவனம், 'மேட் ஃபார் இந்தியா ஸ்மார்ட்போன்' அதாவது 'இந்தியாவுக்கான ஸ்மார்ட்போன்' என அழைக்கிறது. இந்த தொலைபேசியை தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனை தவணைகளில் வாங்கலாம்: எப்படி? 

வாடிக்கையாளர்கள் தவணைகளிலும் 'ஜியோபோன் நெக்ஸ்ட்'-ஐ வாங்கலாம் என ஜியோ (Jio) நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தொலைபேசியை தவணைகளில் வாங்க, வாடிக்கையாளர்கள் முதலில் ரூ. 1,999 செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை 18 முதல் 24 மாத தவணைகளில் செலுத்தலாம். 

இரு நிறுவனங்களும் அளித்த கூட்டறிக்கையில், "முதல் முறையாக, குறைந்த விலை கொண்ட தொலைபேசியை தவணைகளில் வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், இந்த போனை வாங்குவதை இன்னும் எளிதாகவும், வாடிகையாளர்களுக்கு வசதியாகவும் ஆக்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இண்டர்நெட்டைத் தொடர்ந்து இப்போது ஸ்மார்ட்போன் புரட்சியை செய்யத் தயார் ஆகும் ஜியோ 

நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் (Qualcomm Chipset) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அனைத்து ஜியோமார்ட் சில்லறை கடைகளிலும் கிடைக்கும். 

ALSO READ: JioPhone Next: Cheapest 4G ஸ்மார்ட்போன், எந்த போனும் பக்கத்தில் நீற்கக்கூட முடியாது 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 'கூகிள் மற்றும் ஜியோ குழுக்கள் பண்டிகை காலத்தில் சரியாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த போனை அறிமுகம் செய்வதில் வெற்றியடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. கோவிட் 10 (Covid-19) தொற்று காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சவால்கள் இருந்தபோதிலும், நாம் வெற்றிகரமாக இதை செய்து முடித்திருக்கிறோம். 135 மில்லியன் இந்தியர்கள் வாழ்க்கையை வளமாகவும், தற்சார்பு கொண்டதாகவும், இலகுவாகவும் ஆக்க டிஜிட்டல் புரட்சியின் பலம் மிக உதவியாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முதலில் நாங்கள் இணையத்தின் மூலம் இதை செய்தோம். இப்போது, இந்த நேரத்தில் மீண்டும் ஸ்மார்ட்போன் மூலம் அதை செய்து காட்டுவோம்' என்று கூறினார்.

உலகின் மலிவான தொலைபேசி!

நிறுவனத்தின் படி இது உலகின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக (Smartphone) இருக்கும். இந்த தொலைபேசி 10 வகையான மொழிகளுக்கான வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் பல அசத்தலான அம்சங்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம், மற்ற மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கு இது சரியான போட்டியை அளிக்கும்.

ALSO READ: பிளிப்கார்ட் சேலில் படு டிமாண்டில் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News