பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் விதமாக தற்போது இந்திய இரயில்வே துறை புதிய தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே துறை சமீபகாலமாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக் இல்லா இரயில்வே நிலையங்களை உறுவாக்கும் முயற்சியில் தற்போது மேலும் ஒரு புதிய உக்தியை அறிமுகம் செய்துள்ளது.



இரயில்வே நிலையங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை பயணிகள் இரயில்வே நிலையங்களில் வீசி செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த  பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை குறைக்கு விதத்தில் தற்போது இந்திய ரயில் நிலையங்களில் முதல்முறையாக வதோதராவில் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கிகளை பொருத்தியுள்ளது.


இந்த பாட்டில் நொறுக்கிகளில் பயணிகள் பாட்டிலை நொறுக்குவதன் மூலம் ரூ.5 வரையில் பரிசாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டலை நொறுக்குவதற்கு முன்னதாக பயணிகள் தங்கள் கைப்பேசி எண்ணினை உள்ளிட வேண்டும். பின்னர் பாட்டிலை நொறுக்க வேண்டும், இதனையடுத்து சிறிது நேரத்தில் பயணிகளின் கைபேசி எண்னுடன் இணைக்கப்பட்ட Paytm கணக்கிற்கு பணம் வந்து சேரும்.


இந்த புதிய வசதியினை தற்போது இந்திய இரயில்வே துறை வதோதராவில் மட்டும் புகுத்தியுள்ளது. இதன் வரவேற்பை பொறுத்து இதர இரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.