Automobile News In Tamil: ஒரு தயாரிப்பு பொருள் என்பது கடைசியில் வாடிக்கையாளர்களின் கைக்களுக்கு வரும் வரும் அனைத்து விதமான வரிகள் உள்பட பல விஷயங்கள் அதன் விலையில் தாக்கத்தை செலுத்தும். அதிலும் நீங்கள் ஒரு பொருளை இறக்குமதியால் செய்தால் அதில் கூடுதல் வரிகளும் செலுத்த வேண்டியிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்கவே பலரும் முயற்சிப்பார்கள். குறிப்பாக, சில சொகுசு கார்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் அதனை இறக்குமதி செய்தே வாங்க வேண்டும். இருப்பினும் அவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் போது அதன் விலை இன்னும் குறையும். 


அந்த வகையில்தான், Range Rover மற்றும் Range Rover Sport ஆகிய இரண்டு கார்களும் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இங்கிலாந்துக்கு வெளியே இந்தியாவில் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. Range Rover கார்கள் 1970ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தின் சோலிகுல் பகுதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | Yamaha MT 15 : காலேஜ் பசங்களின் கனவு பைக்! இப்போது வெறும் ரூ.22,000க்கு வாங்கலாம்


இந்நிலையில், இந்தியாவில் புனேவில் உள்ள ஜாக்குவார் லேண்ட் ரோவரின் (JLR) ஆலையில் Range Rover மற்றும் Range Rover Sport கார்களும் தயாரிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே Jaguar F-Pace, Discovery Sport, Range Rover Velar, Ranga Rover Evoque ஆகிய கார்கள் புனே ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள Range Rover மற்றும் Range Rover Sports கார்களின் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம். 


Range Rover


Range Over கார் இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. 3.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோபையோகிராபி (393bhp மற்றும் 550Nm) மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஹெஎஸ்இ (346bhp மற்றும் 700Nm) என இரண்டு வேரியண்டில் வருகிறது.


Range Rover 3.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோபையோகிராபி வேரியண்டின் விலை ரூ.2.60 கோடிக்கும் (ஷோரூம் செலவுகள் சேர்க்காமல்), Range Rover 3.0 லிட்டர்  டீசல் ஹெஎஸ்இ வேரியண்டின் விலை ரூ.2.36 கோடிக்கும் (ஷோரூம் செலவுகள் சேர்க்காமல்) விற்பனையாகும். 


பெட்ரோல் மாடல் அதன் முந்தைய விலையில் சுமார் 56 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. டீசல் மாடலில் அதன் முந்தைய விலையில் சுமார் 44 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. இருப்பினும்,  JLR நிறுவனம் Range Rover கார்களின் விலையை அறிவிக்கவில்லை. மே 24ஆம் தேதியான நேற்றில் இருந்து Range Rover மாடல் கார்கள் புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவரி செய்யப்படுவதாக JLR தெரிவித்துள்து.


Range Rover Sport


Range Rover Sport 3.0 லிட்டர் பெட்ரோல் டைனாமிக் எஸ்இ (393bhp மற்றும் 550Nm), 3.0 லிட்டர் டீசல் டைனாமிக் எஸ்இ (393bhp மற்றும் 550Nm) ஆகிய இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. இரண்டும் ரூ.1.40 கோடிக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஷோரூம் செலவுகள் சேர்க்காமல் இந்த விலை ஆகும். இது முந்தைய விலையில் ரூ.29 லட்சம் குறைக்கிறது. இது வரும் ஆக. 16ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க |முரட்டு மைலேஜ் கொடுக்கும் மாஸான கார்... மாருதி சுசுகி Swift மாடலில் வந்துள்ள மாற்றங்கள் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ