விரைவில் வெளியாகிறது 24 மணி நேரம் NEFT வசதி
வரும் டிசம்பர் 16 முதல் NEFT எனப்படும் தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறை 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
வரும் டிசம்பர் 16 முதல் NEFT எனப்படும் தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறை 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
2016ம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மக்கள் ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக மேற்கொள்ளவேண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறை 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. முன்னதாக இந்த வசதி வாராந்திர நாட்களிலும், முதல், 3ம் மற்றும் 5ம் சனிக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே உள்ளது.
இந்நிலையில் தற்போது ஆண்டு முழுதும் இந்த நடைமுறை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வு வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.