Realme C30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதன்முதலாக விற்பனைக்கு வந்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Realme புதிய ஸ்மார்ட்போன் Realme C30 ஜூன் 27 முதல் Flipkart-ல் விற்பனைக்குக் கிடைக்கிறது. பல அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சமே விலை குறைவு தான். 7,499 ரூபாய்க்கு இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இதனை பிளிப்கார்ட்டில் வெறும் 374 ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C30 ஸ்மார்ட்போன்


ரியல்மீயின் புதிய ஸ்மார்ட்போன், Realme C30 Flipkart-ல் விற்பனைக்கு வந்துள்ளது. 7,499 ரூபாய் விலையில் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் இந்த போனுக்கு பல கூடுதல் சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ.375 கேஷ்பேக் கிடைக்கும். இந்த ஆஃபருக்குப் பிறகு 7,124 ரூபாய்க்கு கிடைக்கும். 


மேலும் படிக்க | Flipkart Offer: ரூ.26 ஆயிரத்துக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள டிவி


ரூ.374-க்கு வாங்குவது எப்படி?


Realme C30 ஸ்மார்ட்போனை 374 ரூபாய்க்கு வாங்க, ஆஃபரில் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.6,750 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.7,124-லிருந்து வெறும் ரூ.374 ஆகக் குறையும்.


Realme C30-ன் அம்சங்கள்


Realme C30 ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.5-இன்ச் HD + LCD டிஸ்ப்ளே இருக்கும். 4G ஸ்மார்ட்போன். இந்த டூயல் சிம் ரியல்மீ ஃபோனில் 8 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கும். 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் Unisock T612 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் நீட்டிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Google Warning: கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - உடனே டெலிட் செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR