ரியல்மீ நிறுவனம் கடந்த வாரம் Realme C55-ஐ அறிமுகப்படுத்தியது, இதன் விற்பனை மார்ச் 28 முதல் தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 100,000 Realme ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி அனைத்து விற்பனை சாதனைகளையும் முறியடித்துள்ளது. மார்க்கெட்டில் விற்பனையில் கோலோச்சிய Realme C55-ன் சிறப்பம்சங்களை இங்கே தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | WhatsApp New Feature: விரைவில் வருகிறது புதிய ‘ஆடியோ சேட்' அமசம், குஷியில் பயனர்கள்!!


Realme C55 சாதனை


Realme C55 சாதனம் விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட 5 மணி நேரத்தில் 100,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. இது மட்டுமல்லாமல், C55 மாடலுக்கு 66,000 முன்கூட்டிய ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் ரியல் மீ நிறுவனம் கூறியிருக்கிறது. இது Realme C தொடர் ஸ்மார்ட்போன்களில் ஒரு சாதனத்திற்கு இதுவரை இல்லாத அதிகபட்சமாகும் டிமாண்ட் ஆகும்.


Realme C55 விவரக்குறிப்புகள்


Realme C55 ஆனது 6.72-இன்ச் உயரமான FHD+ LCD பேனலைக் கொண்டிருக்கிறது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது மற்றும் 8-மெகாபிக்சல் பஞ்ச் ஹோல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio G88 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 8GB வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 8GB மற்றும் 128GB உள் சேமிப்பகத்தை எக்ஸ்டன்ஸன் செய்து கொள்ளலாம். 


இந்தியாவில் realme c55 விலை


ரியல்மீ சி55 அடிப்படை மாடல் ரூ.10,499-ல் தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் 4GB + 64GB மாறுபாட்டிற்கு 500 கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் 8GB + 128GB உள்ளமைவு 1,000 INR தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் நிறுவனத்தின் வெளியீட்டு விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருந்தது.


மேலும் படிக்க | அதிகமாக SPAM கால் வருகிறதா? ப்ளாக் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ