WhatsApp New Feature: விரைவில் வருகிறது புதிய ‘ஆடியோ சேட்' அம்சம், குஷியில் பயனர்கள்!!

WhatsApp New Feature: ஒரு அட்டகாசமான புதிய அம்சத்தை ஆன்லைன் சேட்டிங் தளமான வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது புதிய சேட்டிங் அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2023, 01:48 PM IST
  • இந்த அம்சம் தொடங்கப்பட்டதும், சேட் ஹெட்டரில் புதிய அலைவடிவ ஐகான் சேர்க்கப்படும்.
  • இதன் மூலம், பயனர்கள் ஆடியோ சேட்டைத் தொடங்கவும், ஒருவருக்கொருவர் பேசி சேட் செய்யவும் முடியும்.
  • புதிய ஆடியோ சேட் அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் நிகழ்நேர அனுபவத்தை அனுபவிக்க முடியும்.
WhatsApp New Feature: விரைவில் வருகிறது புதிய ‘ஆடியோ சேட்' அம்சம், குஷியில் பயனர்கள்!! title=

வாட்ஸ்அப் புதிய அம்சம்: மெட்டாவின் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. இந்த முறையும் வாட்ஸ்அப் ஒரு ஆடியோ அம்சத்தின் அறிமுகத்துக்காக செயல்பட்டு வருவதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சேட்டிங் தளமான வாட்ஸ்அப்பில் மக்கள் உரையாடும் போக்கையும் பாணியையும் மாற்றி அமைக்கும் என நம்பப்படுகின்றது. ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப்பின் புதிய ஆடியோ அரட்டை அம்சத்தை (ஆடியோ சேட் பீச்சர்) விரைவில் பெறக்கூடும். வாட்ஸ்அப்பின் இந்த ஆடியோ அரட்டை அம்சங்கள் என்ன என்பதையும் பயனர்கள் அதிலிருந்து எவ்வாறு பயனடைவார்கள் என்பதையும் இந்த பதிவில் காணலாம். 

சேட் ஹெட்டரில் புதிய அலைவடிவ ஐகான் சேர்க்கப்படும் என WABetaInfo இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது பயனர்கள் ஆடியோ சேட்டைத் தொடங்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் எப்போது வெளியாகும், எப்படி செயல்படும் என்பது குறித்து WhatsAppல் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இன்னும் வரவில்லை. இருப்பினும், வரவிருக்கும் இந்த வாட்ஸ்அப் அம்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்கள் அறிக்கையில் உள்ளன. 

இந்த அம்சம் தொடங்கப்பட்டதும், சேட் ஹெட்டரில் புதிய அலைவடிவ ஐகான் சேர்க்கப்படும். இதன் மூலம், பயனர்கள் ஆடியோ சேட்டைத் தொடங்கவும், ஒருவருக்கொருவர் பேசி சேட் செய்யவும் முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதிய ஆடியோ அரட்டை அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் நிகழ்நேர அனுபவத்தை (ரியல் டைம் எக்ஸ்பீரியன்ஸ்) அனுபவிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் உரையாடலை ரெகார்ட் செய்யும் வசதி ஏற்கனவே வாட்ஸ்அப்பில் உள்ளது.

மேலும் படிக்க | அதிகமாக SPAM கால் வருகிறதா? ப்ளாக் செய்வது எப்படி? 

இதனுடன், பயனர்கள் இயக்கத்தில் உள்ள காலை கட் செய்ய சிவப்பு பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். அலைவடிவ ஐகான் நிகழ்நேர ஆடியோ காட்சிப்படுத்தலின் சாத்தியத்தை காட்டுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சேட் ஹெட்டருக்கு மேலே உள்ள இடம் ஆடியோ அலைவடிவங்களைக் காட்டுவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மத்தியில், மெட்டா விண்டோஸிற்கான புதிய வாட்ஸ்அப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அது வேகமாக லோட் ஆகிவிடும். மேலும் இது செயலியின் மொபைல் பதிப்பைப் போன்ற இடைமுகத்தை வழங்குகிறது. பயனர்கள் இப்போது எட்டு நபர்களுடன் குழு வீடியோ அழைப்புகளையும், 32 பேர் வரை ஆடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். 

மேலும் படிக்க | Flipkart Sale: வெறும் 13 ஆயிரத்திற்கு ஐபோன் - அதிரடி விலை குறைப்பில் அசத்தல் விற்பனை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News