செம்ம பேட்டரி பேக்கப்; Realme மாஸ் ஸ்மார்ட் வாட்ச் விரைவில் அறிமுகம்
Realme ஒரு புதிய Smartwatch Realme Watch 2 Pro ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
Realme Watch 2 Pro Smartwatch Launch Price Specs: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் Realme விரைவில் Smartwatch பிரிவில் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது, இதற்கு Realme Watch 2 Pro என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் Realme இன் வடிவமைப்பு மிகவும் சிறப்பானது மற்றும் சமீபத்திய விளம்பரத்தில், நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த சாதனத்தை விளம்பரப்படுத்துவதைக் காணலாம். Realme Watch 2 Pro இன் விவரக்குறிப்பு விவரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே கசிந்துள்ளன. இந்தியாவில் குறைந்த விலையில் நல்ல அம்சங்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்திய பின்னர், Realme மற்றொரு புதிய ஸ்மார்ட்வாட்சைக் கொண்டு வருகிறது.
Realme Watch 2 Pro ஸ்மார்ட்வாட்சில் 1.75 அங்குல டச் டிஸ்ப்ளே உலாளது, இதன் ஸ்கிரீன் ரீசொல்யூஷன் 320x385 பிக்சல்கள் மற்றும் பிரைட்நெஸ் 600 நிட்கள் உள்ளது. Realme Watch 2 Pro இன் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் சுமார் 5300 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்சை (Smart Watch) ஒரே கட்டமாக சார்ஜ் செய்வதன் மூலம் இரண்டு வாரங்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்று Realme கூறியுள்ளது.
ALSO READ | 20 mins-ல் full charge, முழு வாரம் ஓடும்: அறிமுகமாகிறது அட்டகாசமான Oneplus Smartwatch
Realme வாட்ச் 2 ப்ரோ அடுத்த வாரம் இந்திய சந்தையில் வருவதாக Realme அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 23 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு இந்த ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்ய Realme திட்டமிடப்பட்டுள்ளது.
Realme Watch 2 Pro விவரக்குறிப்புகள்
- 1.75-inch டிஸ்ப்ளே
- 320 x 385 pixels resolution
- பிரைட்நெஸ் 600 நிட்கள் உள்ளது
- dual-satellite GPS
- இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு சென்சார்
- IP68 water-resistant
- 14 நாட்கள் செயல்படும் 390 எம்ஏஎச் திறன்கொண்டபேட்டரி
ALSO READ | Samsung Galaxy F22: இந்த வழியில் 10% தள்ளுபடி பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR