Samsung Galaxy F22: சாம்சங் சமீபத்தில் தனது Samsung Galaxy F22 ஐ அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இன்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விற்பனை 12 மணி முதல் தொடங்கியது.
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் Samsung Galaxy A22 அம்சங்களுடன் கிட்டத்தட்ட ஒத்துள்ளன. இதன் விலை ரூ .18,499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F22-ஐயும் நிறுவனம் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. இதை ஆக்சிஸ் வங்கியின் (Axis Bank) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும்போது 10% தள்ளுபடி கிடைக்கிறது.
Samsung Galaxy-யில் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் நீண்ட நேரம் நீட்டிக்கக்கூடிய பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சந்தையில், இந்த தொலைபேசி ரெட்மி நோட் 10 மற்றும் ரியல்மே நர்சோ 30 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடுகிறது. இதன் பின்புற கேமராவில் 48MP முதன்மை, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP-இன் இரண்டு தனித்தனி சென்சார்கள் உள்ளன.
ALSO READ: முதல் 5G போன்; Redmi ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம்
இந்த தொலைபேசியில் வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபி எடுக்க 13 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் சைட் மவுண்டட் கைரேகை சென்சார் கிடைக்கிறது. இணைப்பிற்கு, இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன.
நிறுவனம் Samsung Galaxy F22-ஐ இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் தொடக்க விலை ரூ .12,499 ஆகும். அதன் டாப் மாடலின் விலை ரூ .14,499 ஆகும். இந்த தொலைபேசியை நிறுவனம் இன்று அதாவது ஜூலை 13 அன்று முதல் விற்பனையாக ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் 10% தள்ளுபடியுடன் இதை வாங்கலாம். இதில் ரூ .13,700 வரையிலான பரிமாற்ற சலுகையும் உள்ளது. மேலும், சாம்சங் கேலக்ஸி எஃப் 22 ஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து 6000 எம்ஏஎச் வலுவான பேட்டரியுடன் வாங்கலாம். இது 159.9 × 74.0 × 9.3 மிமீ என்ற அளவுகளில் 203 கிராம் எடையுடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 22 விவரக்குறிப்புகள்
Samsung Galaxy F22-ல் 1600 × 720 பிக்சல்களுடன் 6.4 இன்ச் சமோல்ட் இன்பினிட்டி-யு டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு வீதம் 90 ஹெர்ட்ஸ் ஆகும். கேலக்ஸி எஃப் 22 ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 ஆக்டா கோர் செயலி கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.
முதல் வேரியண்ட்டில் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் 4 ஜிபி ரேம் மற்றும் இரண்டாவது வேரியண்டில் 128 ஜிபி ஸ்டோரேஜ் 6 ஜிபி ரேம் ஆகியவை உள்ளன. இந்த தொலைபேசி டெனிம் பிளாக் மற்றும் டெனிம் ப்ளூ கலர் என்ற வண்ணங்களில் வருகிறது.
ALSO READ: Samsung Galaxy M32: ரூ. 15,000 போனை வெறும் ரூ. 4000-ல் வாங்க அமேசானில் சூப்பர் வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR