வரும் செப்டம்பர் 25-ஆம் நாள் ரெட்மீ 8A ஸ்மார்ட் போன், இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெட்மீ 8A அறிமுகத்திற்காக இந்தியாவில் Flipkart மற்றும் Xiaomi-ன் Mi.com தளங்களில் அதற்கான பிரத்யேக இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளன. ரெட்மீ 7A போனின் அடுத்த வெர்ஷனாக வெளியாகவுள்ள ரெட்மீ 8A, அதிவேக சார்ஜிங் வசதியைப் பெற்றிருக்கும் என கருதப்படுகிறது.


இந்த புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்-ட்ராப் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதைத் தவிர டூயல் ரியர் கேமரா மற்றும் எச்.டி+ திரையுடன் வெளியாகவுள்ளது 8A.


‘Aura wave grip' வடிவமைப்புடன் வரும் ரெட்மீ 8A மூலம், போனை கையில் பிடித்திருப்பது வசதியாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 8A போனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தில் போன் குறித்து பல்வேறு தகவல்கள் பூடகமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 


பல்வேறு அம்சங்களுடன் வெளியாகும் இந்த ரெட்மி 8A-வில் எடுக்கப்படும் செல்பிக்கள் பிரமிக்க வைக்கும் எனவும் கூறப்படுகிறது. ‘பலகட்ட பணிகளிலும் போன் இலகுவாக இயங்கும்' என்றும் அடுக்கடுக்காக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 


ரெட்மீ 7A போனில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி பொருத்தப்பட்டிருந்த நிலையில், ரெட்மீ 8A-வில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கும் எனப்படுகிறது. 


பிரத்யேக இணையப் பக்கம் மூலம், 8A வெளியிடும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளியிடும் நிகழ்ச்சிக்காகவும் தனியாக ஒரு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 


ரெட்மி 8A விலையைப் பொறுத்தவரை, 7A-வுடன் ஒப்பிடும்போது சுமார் 5,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.