ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை, ரூ.15,000 என்பது எப்போதுமே மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆக்கிரமிப்புகள் மிகுந்த ஒரு விலை பிரிவாகும். இப்பிரிவின் கீழ் ரெட்மி மட்டுமின்றி மோட்டோ போன்ற நிறுவனங்களிடம் இருந்தும் மிகவும் ஈர்க்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளியான வண்ணம் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியாக வெளியான ரெட்மி நோட் 10S (Redmi Note 10S) மற்றும் மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் (Moto G40 Fusion) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் சரிக்கு சமமான போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறது.


ALSO READ | Redmi புதிய போன் மற்றும் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்: அதிரடி விலை, அசத்தலான அம்சங்கள், விவரம் இதோ


ரெட்மி நோட் 10S
ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மார்ச் மாதத்தில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சியோமி ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி 95 SoC மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி வாட்ச் ஆனது 1.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இதன் எடை வெறும் 35 கிராம் மட்டுமே உள்ளது. 


ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.14,999 க்கும், அதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.15,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டீப் சீ ப்ளூ, ஃப்ரோஸ்ட் வைட் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.


மோட்டோ ஜி 40 ஃப்யூஷன்
மோட்டோ ஜி 40 ஃப்யூஷன் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது - 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ். இது ரூ.13,999 மற்றும் ரூ.15,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது விலை உயர்வுக்குப் பிறகு, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.14,499 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.16,499 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 அதிகரித்துள்ளது.


மோட்டோ ஜி 40 ஃப்யூஷனின் இந்த புதிய விலை ஏற்கனவே பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. இது டைனமிக் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின் வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.


Moto G40 Fusion
– Gets technically superior Snapdragon 732G chip
– Bigger 120Hz display
– Lower starting price
– Better battery life
– Clean Android experience


Redmi Note 10S
– Helio G95 chip still fast enough for most users and gamers
– More vibrant AMOLED display
– Faster charging tech
– Better build quality
– Better camera performance
– MIUI 12.5 is feature-rich


எனவே இரண்டு தொலைபேசிகளும் சமமாக திறன் கொண்டவை மற்றும் அவற்றின் சொந்த நன்மைகளை வழங்குகின்றன.


ALSO READ | 4 ஆயிரம் ரூபாய் வரை சலுகை! 108 மெகாபிக்சல் Mi ஸ்மார்ட்போனில் சிறப்பு சலுகை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR