சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் ஃபோன் பெரும்பாலும் அனைவரின் கைகளிலும் இருக்கிறது. தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் ரெட்மி 12 சீரிஸ் வெளியாகவிருக்கிறது. ஆனால் அது எப்போது வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் இருந்தது. தற்போது அதுகுறித்த அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி,ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 27ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்துடன் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200MP கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் பெறும் என சியோமி தெரிவித்திருக்கிறது. புதிய 200MP சென்சார் 1/1.4 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சூப்பர் QPD ஆட்டோபோக்கஸ் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி 16 இன் 1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் உள்ளது. இந்த சென்சார் உள்ள இதர அம்சங்கள் அதிகபட்சம் 4 ட்ரில்லியன் நிறங்களை பிரதிபலிக்க செய்கிறது. இதில் HDR மற்றும் 8K வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | WhatsApp Down: 'எழுந்திரு அஞ்சலி... எழுந்திரு' - ட்விட்டரில் குவியும் மீம்ஸ்!


ரெட்மி நோட் 12 ப்ரோ டீசரின்படி இந்த ஸ்மார்ட்ஃபோன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்ஃபோன்கள் மட்டுமின்றி சியோமி புக் ஏர் 13 நோட்புக் மாடலையும் சியோமி அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ