மக்கள் இவ்வளவு Ola பைக்கா வாங்குறாங்க?? - வெளியான புள்ளி விவரம்
இந்தியாவில் ஓலா பைக்குகளின் பயன்பாடு கனிசமாக உயர்ந்து வருகிறது. விரைவில் முன்னணி நிறுவனத்தை தாண்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. அதேபோல ஆங்காங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதும், வெடித்து சிதறுவதுமாக இருக்கின்றன.
எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக இருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை பைக்குகளின் ஆதிக்கமே சாலைகளில் அதிகம். பெரும்பான்மையான மக்கள் அருகில் இருக்கும் பகுதிகளுக்கும் தினசரி அலுவலகத்துக்கும் சென்றுவர பைக்குகளையே நாடுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் உற்பத்தியும் நுகர்வும் பெறுகி வருகிறது.
மேலும் படிக்க | 400 கி.மீ செல்லும் டாடா நெக்ஸான் இந்தியாவில் எப்போது அறிமுகம்?
இந்தியாவின் அதிக எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யும் நிறுவனமாக ஹீரோ உள்ளது. மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தின் 13000 வாகனங்கள் பதிவுக்கு வந்திருப்பதாக பத்திரப்பதிவுத் துறையின் VAHAN இணையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற Ola பைக் நிறுவனம் மார்ச் மாதத்தில் 9,118 வாகனங்களை பதிவு செய்திருக்கிறது. இது பெப்ரவரி மாதத்தை விட மூன்று மடங்கு அதிகம். அதாவது பிப்ரவரியில் ஓலா நிறுவனம் 3904 வாகனங்களை மட்டுமே பதிவு செய்திருந்தது.
மேலும் படிக்க | பலரின் கார் கனவுகளை நிறைவேற்றிய Maruti Alto - புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்
தற்போதைய ஓலா நிறுவனத்தின் தகவலின்படி அதிகமான மக்கள் ஓலா பைக்கை வாங்க வேண்டி பதிவு செய்துவருவதாகவும் தங்களால்தான் அதனை கொடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறது. விரைவில் ஓலா பைக்குகளின் எண்ணிக்கை ஹீரோ எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR