ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன்16 மாடல் போன்களை, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ காம்ர்ஸ் தளங்களை தவிர, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்திலும் வாங்கலாம். இங்கே நீங்கள் ஐபோன் 16 ஐ குறைந்த விலையில் வாங்கலாம். வங்கி தள்ளுபடி தவிர, No-Cost EMI வசதியையும் பெறலாம். iPhone 16 சீரிஸ் போன்களுக்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் 16 செப்டம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த போன் ரிலையன்ஸ் டிஜிட்டலில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 16 128ஜிபி வகையின் விலை ரூ.79,900. ஆனால் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஐபோன் 16 மாடல்களுக்கு ரூ.5,000 என்ற அளவிற்கு உடனடி தள்ளுபடி வழங்குகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடல்களுக்கு ரூ.4000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.


iPhone 16 நோ-காஸ்ட் EMI


ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.5,000 கிடைக்கும். தள்ளுபடிக்கு பிறகு போனின் விலை ரூ.74,900 ஆக இருக்கும். இது தவிர, நோ-காஸ்ட் EMI என்ற விருப்பமும் உள்ளது. நீங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ தேர்வு செய்தால், 6 மாதங்களுக்கு ரூ.12,483 EMI செலுத்த வேண்டும்.



மேலும் படிக்க | சந்தையில் உலவும் டூப்ளிகேட் ஐபோன்கள்.... வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்க மக்களே


ஐபோன் 16 சிறப்பு அம்சங்கள்


ஐபோன் 16 பழைய ஐபோனை விட பல வகையில் சிறந்தது. iPhone 16 மாடல்களில் Apple Intelligence அம்சங்கள் உள்ளன. ஆப்பிள் அதன் AI அம்சங்களை எதிர்கால iOS 18.1/18.2 மென்பொருள் புதுப்பிப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் A18 சிப் போன்ற பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. வேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த சிப் மூலம் உங்கள் ஃபோன் மிக வேகமாக இயங்கும். இதில் உள்ள சிறப்பு அம்சங்களை கொண்ட சூப்பர் கேமிரா மூலம் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். ஃபோன் மூலம் வீடியோக்களை எடுக்கலாம். இது தவிர, இந்த போனின் பேட்டரி மிக நீண்ட நேரம் நீடிக்கும். எனவே நீங்கள் அதை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியதில்லை.


ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்


ஐபோன் 16 போன் மட்டுமல்லாது, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max ) போனையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஆப்பிள் தனது புதிய ஐபோன் 16 தொடரை இந்தியாவிலும் பிற நாடுகளிலும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், ஐபோன் 15 சீரிஸின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் போன் இந்தியாவில் ரூ. 1,59,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.1,37,990க்கு கிடைக்கிறது. இந்த ஆஃபர் 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய பிளாக் டைட்டானியம் கலர் மாடலுக்கானது என முன்னதாக தகவல் வெளியானது.


மேலும் படிக்க | மலிவான கட்டணத்தில் தினம் 3GB... 22+ OTT சேனல்கள்... அசத்தும் ஏர்டெல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ