உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப ரூ.200க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்
Technology News In Tamil: உங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
தொழில்நுட்பம் செய்திகள்: நாளுக்கு நாள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரித்து வருவதால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மலிவான, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப சில திட்டங்களை வழங்கி வருகின்றன. அந்ததிட்டங்களிலும் அதிக டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் மேலும் சில சலுகைகளும் வழங்கப்படுகிறது. வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகளுடன் கூடிய 200 ரூபாய்க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை தினசரி டேட்டா நன்மைகள், வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற அம்சங்களுடன் ரூ.200க்குள் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. எனவே நீங்கள் குறுகிய கால திட்டத்தைத் தேடுகிறீர்கள் மற்றும் உங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்தத் திட்டங்களைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: Online Payment Fraud; ’எங்களுக்கே சவாலாக இருக்கிறது’ எச்சரித்த கூகுள்
200 ரூபாய்க்கு குறைவான Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்:
ரூ.179 திட்டம்: இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, 300எஸ்எம்எஸ் , 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும். இதனுடன் Vi Movie மற்றும் TV நன்மைகளை வழங்குகிறது.
ரூ.195 திட்டம்: இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இது 30 நாட்கள் செல்லுபடியாகும். இதனுடன் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு Vi Movies மற்றும் TV பலன்களை வழங்குகிறது.
மேலும் படிக்க: 5G Network in India: விரைவில் 5G ... Reliance Jioவின் முக்கிய அறிவிப்பு!
200 ரூபாய்க்கு குறைவான ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:
ரூ.149 திட்டம்: இந்த திட்டமானது வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 20 நாட்கள் செல்லுபடியாகும். இதனுடன் தினசரி 1ஜிபி டேட்டா வரம்பை வழங்குகிறது.
ரூ. 179 திட்டம்: இந்த திட்டத்தில், நீங்கள் வரம்பற்ற அழைப்பு, 1ஜிபி தினசரி டேட்டா வரம்பு மற்றும் 24 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க: உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி வேலை செய்யுமா? இப்படி தெரிந்துகொள்ளலாம்
200 ரூபாய்க்கு குறைவான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்:
ரூ.155 திட்டம்: இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ், 1ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன் ஹலோ ட்யூன்களை (HelloTunes) பயன்படுத்திக் கொள்ளலாம். மலஐம் Wynk Music-க்கான இலவச சந்தாவை பெறலாம். இது 24 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.179 திட்டம்: இந்த திட்டமானது வரம்பற்ற அழைப்பு, 300 எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா மற்றும் HelloTunes இன் கூடுதல் நன்மைகள் மற்றும் Wynk Musicக்கான இலவச சந்தா கிடைக்கும். இது 24 நாட்கள் செல்லுபடியாகும்.
மேலும் படிக்க: பான் கார்டு அப்டேட் கேட்கிறதா எஸ்பிஐ? மொபைலுக்கு வரும் லிங்கை கிளிக் செய்யாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ