PIB Fact Check: உங்களுக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. பான் கார்டு புதுப்பிப்பு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் செய்தி வந்துள்ளதா?. ஆம் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விவரங்களைப் பகிர்ந்தால், வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புகள் உள்ளன. PIB இந்த வைரலான செய்தியின் உண்மையை தன்மையை சரிபார்த்துள்ளது. உங்களுக்கும் இதுபோன்ற செய்தி வந்திருந்தால், அதற்கு முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எஸ்பிஐ பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், அதில் உங்கள் கணக்கை பிளாக் செய்யப்படாமல் காப்பாற்ற விரும்பினால், அதில் உங்கள் பான் எண்ணை விரைவாக அப்டேட் செய்யுங்கள் என்று வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்தி முற்றிலும் போலியானது. வாடிக்கையாளருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் அத்தகைய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே இதுபோன்ற போலி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் பணத்தை சுருட்டும் நிறுவனம்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்
பிஐபி வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதனால், உங்கள் வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படலாம். போலியான செய்திகள் வந்தால், report.phishing@sbi.co.in என்ற இந்த மெயிலில் புகார் செய்யலாம். இது தவிர, 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
A #Fake message issued in d#PIBFactCheck
— Fact Check (@PIBFactCheck) August 27, 2022
உங்களுக்கும் இதுபோன்ற போலிச் செய்திகள் வந்தால், அது உண்மையா என சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்க வேண்டும். இது தவிர, +918799711259 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வீடியோவை அனுப்பலாம்.
மேலும் படிக்க | அமேசான் - பிளிப்கார்ட்டை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் இணையதளம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ