ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!
Jio best value plan: ஜியோவின் அனைத்து திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...
சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், , தற்போது வாடிக்கையாளர்களின் அதிர்ச்சிக்கு சற்றே ஆசுவாசம் தந்துள்ளது. ஜியோவின் அனைத்து ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் டேட்டா ஆட்-ஆன் திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஜியோவின் புதிய திட்டங்கள்
அண்மையில் அதாவது ஜூலை 3ம் தேதி முதல், ஜியோவின் ரீசார்ஜ் மற்றும் இணைய வசதியை அளிக்கும் திட்டங்களின் விலை 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. திடீரென 25 சதவித விலை அதிகரிப்பு என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இது புதிதாக ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்களையும் பின்வாங்க வைத்தது என்பதுடன், எந்த திட்டத்தை வாங்குவது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால், ஜியோ தனது மலிவுத் திட்டங்களின் பட்டியலில் இரண்டு புதிய திட்டங்களைச் சேர்த்துள்ளது, ரூ.189 மற்றும் ரூ.479 என்ற இரு புதிய திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
ஜியோ ரூ 189 திட்டம்
ஜியோ அறிவித்துள்ள புதிய ரூ.189 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் 2ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 189 ரூபாய் திட்டத்தில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் எவ்வளவு பேருடனுடன் பேசிக் கொள்ளலாம் என்ற வரம்பற்ற அழைப்பு திட்டத்தைக் கொண்டது. 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் இலவசமாக அனுப்பலாம்.
189 ரூபாய் திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவையும் கிடைக்கும். டேட்டா தீர்ந்துவிட்டால், அதிவேகம் என்பது குறைந்து 64 கேபிஎஸ் என்ற அளவில் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த திட்டத்தில் ஜியோ சினிமா பிரீமியம் சந்தா இருக்காது. சினிமாவிற்கான சந்தாவை தனியாகவே செலுத்த வேண்டியிருக்கும்.
ஜியோ ரூ 479 திட்டம்
ஜியோவின் ரூ.479 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்தத் திட்டத்தில் 6ஜிபி வரை அதிவேக டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் அழைப்புகலும், 1000 இலவச எஸ்எம்எஸ்களும் கொண்ட 479 ரூபாய் ஜியோ திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவையும் கிடைக்கும். தரவு தீர்ந்துவிட்டால், இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைந்துவிடும். இந்தத் திட்டத்திலும் ஜியோ சினிமாவுக்கான சந்தா இருக்காது. தேவைபட்டால், தனிப்பட்ட சந்தாவை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.
டேட்டா குறைவாக தேவைப்படுபவர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் சிறந்தவை, ஆனால் குறைந்த விலையில் அதிக டேட்டா தேவைப்பட்டால், ஜியோவின் 1899 ரூபாய் திட்டம் தான் சரியானதாக இருக்கும். 1899 ரூபாய் ஜியோ திட்டத்தில், 336 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 24ஜிபி டேட்டா கிடைக்கிறது.
மேலும் படிக்க | மீண்டும் உயிருடன் வந்தால் வாழவைக்கும் நிறுவனங்கள்! 2 கோடி ரூபாய் செலவு செய்ய ரெடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ