‘ஜியோ’வில் ஒரே வருடத்தில் 13 கோடி பேர் இணைந்துள்ளனர்
ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை துவங்கிய 365 நாட்கள், அதாவது செப்டம்பர் 5-ம் தேதியுடன் தனது ஒரு வருடத்தை நிறைவு செய்த்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர்களை நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியது, இதுவரை ரிலையன்ஸ் ஜியோ சேவையில் 13 கோடி பேர் இணைந்துள்ளனர். இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சர்வதேச சந்தையிலும் ஜியோ தனக்கான இடத்தை பிடித்துள்ளது. இதனால் தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி
ஜியோ போன் விநியோகம் வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.