ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, கட்டணங்களை உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான கட்டணங்களை வரும் வாரங்களில் உயர்த்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது இன்டர்நெட் மற்றும் அழைப்பிற்கான கட்டணங்களை அடுத்த மாதம் முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன்  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்தவிருக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா சேவை நிறுவனங்கள் இரண்டும், இந்த ஆண்டிற்கான காலாண்டின் முடிவில் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கும் நிலையில், இவ்விரு நிறுவனங்களில் இழப்புகள் மொத்தமாக 74,000 கோடி ரூபாயை தொட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.