இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்தது. ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், வெறும் 1, 50 லட்சம் கோடிகளுக்கு மட்டுமே 5 ஜி அலைக்கற்றை ஏலம் போனது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி மற்றும் ரிலையன்ஸ் இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காட்சிகள் மாறாக அரங்கேறியது. அதானி குழுமம் 5 ஜி சேவையைக் கைப்பற்ற பெரிய முனைப்பு காட்டவில்லை. இதுதான் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அலைக்கற்றையின் பெரும்பாலான சேவையைக் கைப்பற்றியது. சுமார் 88,078 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz பிரிவில் அலைக்கற்றையைக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை வாங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சுமார் 18,784 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றையை வாங்கியுள்ளது.


மேலும் படிக்க | Cheapest Cars: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் டாப் SUV-களின் பட்டியல்


வியப்பளிக்கும் விஷயமாக அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் வெறும் 212 கோடி ரூபாய் மதிப்பிலான 26 ஜிகா ஹெர்ட்ஸ் மற்றும் 400 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை மட்டுமே வாங்கியிருக்கிறது. அதானி நிறுவனம் போட்டி போடாததும், ஏர்டெல்லை விட இரண்டு மடங்கு தொகை கொடுத்து ஜியோ நிறுவனம் அலைக்கற்றை ஏலத்தை கைப்பற்றியிருப்பதும்  வியப்பாக பார்க்கப்படுகிறது. 


ஜியோவின் பிளான்


5ஜி அலைக்கற்றை ஏலத்தைக் கைப்பற்றி இருக்கும் ஜியோ, உற்சாகத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்தால் ஆப்டிக் ஃபைபர் வாயிலாகவும் 5 ஜி சேவையை கொடுக்க முடியும். இதுகுறித்து ஆகாஷ் அம்பானி பேசும்போது, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகிலேயே இவ்வளவு விரைவாக யாராலும் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த முடியாது என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் பின்னணியில் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்திற்கும் இடையே ஏதேனும் சமரசம் இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. 


மேலும் படிக்க | அமோகமாக இன்று அறிமுகமாகும் OnePlus 10T 5G


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ