இந்தியாவில் 6 லட்சத்திற்கும் குறைவான எஸ்யுவி பட்டியல்: நீங்கள் குறைந்த விலையில் எஸ்யுவி-ஐ வாங்க விரும்பினால், இந்திய கார் சந்தையில் பல ஆப்ஷன்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. அவற்றுக்குள் தங்களுக்கு ஏற்ற காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். டாடா பஞ்ச், நிசான் மாக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய மூன்று எஸ்யுவி-கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. அவற்றின் விலை ரூ.6 லட்சத்துக்கும் குறைவான விலையில் தொடங்குகிறது. இந்த மூன்று வாகனங்கள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். இவற்றின் விலை, விவரக்குறிப்புகள் இதோ.
டாடா பஞ்ச்
டாடா பஞ்சின் விலை ரூ.5.93 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியண்ட்டுக்கு ரூ.9.49 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) செல்கிறது. இது அல்ட்ராஸின் 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினை (86PS/113Nm) பெறுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் நிலையான மற்றும் விருப்பமாக 5-ஸ்பீடு ஏஎம்டி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ SUV ஆனது 7-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், இணைக்கப்பட்ட கார் டெக் (கிரியேட்டிவ் ஐ-ரா பேக்) மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | மலிவு விலையில் விற்பனையாகும் டாப் 2 SUV கார்கள்
நிசான் மேக்னைட்
நிசான் மேக்னைட் விலை ரூ.5.97 லட்சத்தில் தொடங்கி ரூ.10.79 லட்சம் வரை செல்கிறது. நிசான் மேக்னைட் ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகும். மேக்னைட் இரண்டு பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களைப் பெறுகிறது: நேசுரலி ஆஸ்பிரேடட் 1-லிட்டர் (72PS/96Nm) மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (100PS/160Nm) ஆகியவை அந்த விருப்பங்களாகும். இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி விருப்பத்தையும் பெறுகிறது.
நிசான் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்புற வென்ட்களுடன் ஆட்டோ ஏசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ரெனால்ட் கிகர்
இந்த காரின் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.10.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை இருக்கும். இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவியும் 5 இருக்கைகள் கொண்டது. கிகர் இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் வருகிறது. இது 1-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் யூனிட் (72PS/96Nm) மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (100PS/160Nm) யூனிட் ஆகியவற்றைப் பெறுகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல், AMT, CVT விருப்பங்கள் கிடைக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ