புதுடெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட PUBG மொபைல் இந்தியா டிசம்பர் முதல் வாரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று செய்தி வெளியான சில நாட்களில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ( Ministry of Electronics and Information technology -MEITY) வட்டாரங்கள், இந்த விளையாட்டு இந்தியாவில் (India) செயல்பட இன்னும் அரசின் ஒப்புதலைப் பெறவில்லை என்று கூறியுள்ளது .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“தடைசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் புதிய நிறுவனத்தை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் செயல்பட முடியாது. அப்படி செயல்படலாம் என்றால், டிக் டாக் (TikTok) அல்லது வேறு எந்த நிறுவனமும் அவ்வாறு செய்ய முடியுமே. இந்தியாவில் மீண்டும் செயல்பட அவர்கள் MEITY இலிருந்து அனுமதி பெற வேண்டும் ”என்று MEITY அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆனால், இதற்கு நேர்மாறாக, பல ஊடக இணையதளங்கள், சில நாட்களுக்கு முன்பு, மொபைல் விளையாட்டின் இந்திய பதிப்பு இந்தியாவில் ஒரு முறையான நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. அமைச்சகம் தனது இணையதளத்தில் அதனை அங்கீகரிக்கும் வகையில் கார்ப்பரேட் அடையாள எண் (Corporate Identity Number- CIN)) வழங்கி நிறுவனத்தை பட்டியலிட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.


PlayerUnknown’s Battlegrounds  எனப்படும் மிகவும் பிரபலமான PUBG மொபைல் செயலி உட்பட 118 சீன செயலிகளை  நரேந்திர மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்தது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், PUBG கார்ப்பரேஷன் ஒரு இந்தியாவில் ஒரு துணை நிறுவனத்தையும் புதிய விளையாட்டையும் உருவாக்கி இந்தியா சந்தையில் மீண்டும் வருவதாக அறிவித்தது. PUBG கார்பரேஷன். அதன் தென் கொரிய தாய் நிறுவனமான கிராப்டன் இன்கார்பரேஷன் (Krafton, Inc) உடன், உள்ளூர் வீடியோ கேம், ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத்  விளையாட்டுகளை கொண்டு வருவதற்காக, இந்தியாவில் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய  திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தது.


ALSO READ | Bullet train contracts: இந்தியாவுக்கு 72%, telecom, signalling பணிகளே ஜப்பனுக்கு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR