கடந்த மாதம் முதல் ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஜியோ உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. இதனால், தங்களுக்கான சரியான திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அந்த சிரமத்தை போக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் விலையில் 2 ஜிபி கிடைக்கும் சில திட்டங்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ரூ.499க்கு BSNL-ல் உள்ள அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்!


84 நாட்கள் வேலிடிட்டியில் ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் - ஐடியா நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் விலையில் 2 ஜிபி டேட்டாவை வழங்கி வருகின்றன. அந்தவகையில் வோடாஃபோனின் 839 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் உங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவும் உங்களுக்கு கிடைக்கும். வேலிடிட்டி முடியும் வரை மொத்தம் 168 ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்துவீர்கள். அதன்படி பார்க்கும்போது, நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் விலையில் 2 ஜிபி டேட்டாவை நீங்கள் பெறுவீர்கள். இவை தவிர, இதில் உங்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்களையும் அனுப்பிக்கொள்ள முடியும். 


ஏர்டெல் நிறுவனத்தின் 839 ரூபாய் திட்டமும், வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் திட்டங்களைப் போலவே ரீச்சார்ஜ் ஃபெனிப்பிட்டுகளைக் கொண்டது. இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கும் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவீர்கள். இதனை கணக்கிடும்போது, நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் விலையில் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக்கொள்வீர்கள். இவை தவிர, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். 100 எஸ்.எம்.எஸ்களையும் இலவசமாக அணுப்பலாம்.


ALSO READ | 5 GB இலவச டேட்டா வழங்கும் BSNL!


இதில் வோடாபோன் - ஐடியா Vi Movies & TV Classic -பேக்கை இலவசமாக கொடுக்கிறது. வார இறுதி டேட்டா ரோல் ஓவர் பலன்களும் உண்டு. ஏர்டெல்லைப் பொறுத்த வரை Amazon Prime Video Mobile Edition, Wink Music, Fastag Cashback, Shaw Academy, Airtel Extreme Premium உள்ளிட்ட இலவச சந்தாக்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR