அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு சில ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, BSNL-ன் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமானது, ரூ.499க்கு சிறப்பு வவுச்சரை தருகிறது, இதன் மூலம் 90 நாட்கள் வேலிடிட்டியை பெறமுடியும். மேலும் இது தினசரி 2GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியையும் தருகிறது. அதனை தொடர்ந்து Zing செயலியையும் இயக்கலாம்.
ALSO READ | விரைவில் வருகிறது மலிவு விலை 5G போன்: அசத்த காத்திருக்கும் Apple நிறுவனம்
BSNL ரூ.200க்கும் குறைவான நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது ரூ.184, ரூ.185 மற்றும் ரூ.186 போன்ற விலைகளில் பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. 1 ரூபாய் விலை வித்தியாசம் இருக்கும் இந்த திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதனையடுத்து ரூ.347 என்ற விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.
BSNL -ஐ போலவே Airtel, Jio மற்றும் Vodafone தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ.300க்குள் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், Airtel-ன் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 1 GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் ஒரு நாளைக்கு 100 SMS வசதியையும் வழங்குகிறது. கூடுதலாக இது Amazon Prime Video, இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்றவற்றையும் பயன்படுத்தும் வசதியையும் தருகிறது. அதேபோல Airtel-ன் ரூ.299 திட்டமானது, அன்லிமிடெட் அழைப்புகளுடன், தினசரி 1.5 GB டேட்டாவையும், ஒரு நாளைக்கு 100 SMSகளையும் வழங்குகிறது.
Jioவின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகளுடன், தினசரி 1.5 GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMSகளையும் வழங்குகிறது. அதேபோல ரூ.299 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகளுடன், தினசரி 2 GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMSகளையும் வழங்குகிறது. மேலும் Vi ரூ.199 ப்ரீபெய்ட் திட்டமானது 18 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 1GB டேட்டாவை வழங்குகிறது. ரூ.219 ப்ரீபெய்ட் திட்டமானது 21 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 1GB டேட்டாவை வழங்குகிறது.
Airtel-ன் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்புகள், 6 GB டேட்டா மற்றும் 900 SMSகளை வழங்குகிறது. மேலும் இது கூடுதலாக Amazon Prime Video Mobile Edition, Apollo 24 | 7 circles, free online courses, Free Hellotunes, Wynk Music.மற்றும் Fastagல் ரூ.100 கேஷ்பேக் போன்ற வசதிகளை வழங்குகிறது. Jioவின் ரூ.395 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகள், 6 GB டேட்டா மற்றும் 1000 SMS களையும் வழங்குகிறது.
Jio ரூ.479 மற்றும் ரூ.533.விலைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன், 1.5GB மற்றும் 2GB தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMSகளை வழங்குகிறது. Airtel ரூ. 479க்கு 56 நாள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்புகள், 1.5 GB தினசரி டேட்டா மற்றும் 100 SMSகளை வழங்குகிறது. அதேபோல Vi ரூ. 479க்கு 56 நாள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்புகள், 1.5 GB தினசரி டேட்டா மற்றும் 100 SMSகளை வழங்குகிறது.
ALSO READ | Google: பிரைவசிக்காக கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR