உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய சீனா (China) மீது உலகமே கோபமாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவிலும் சீனாவிற்கு எதிரான மனநிலை உள்ளது. இந்தியா சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தினால், 20 இந்திய வீரர்கள், வீர மரணம் அடைந்ததை அடுத்து. இந்த கோபம் தீவிரமடைந்துள்ளது. இந் நிலையில் சீனாவை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வலுவாக எழுந்துள்ளது. மக்கள் மத்தியில்  சீனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சீனா செயலிகளுக்கு மாற்றாக பல பாதுகாப்பான பல செயலிகள் உள்ளன. விளையாட்டு தொடர்பான செயலியாக இருந்தாலும் சரி, அல்லது வீடியோ தயாரிப்பது தொடர்பான செயலியனாலும் சரி,  இதனை மக்கள் மிக பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.  


Also read: TikTok செயலிக்கு பதிலாக நாம் இனி எந்தெந்த செயலியை பயன்படுத்தலாம்...


முன்னதாக இந்தியாவில் உள்ள உளவு அமைப்புகள் சுமார் 50 சீனா செயலிகளை உபயோகிப்பது பாதுகாப்பானது அல்ல என்றும் அதில் பாதுகாப்பு இல்லை, அதன் மூலம் தரவுகள் திருடப்படலாம் என எச்சரித்திருந்தது.


மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு செயலி டிக் டாக், இதற்கு மாற்றாக, இந்தியாவின் தயாரிப்பான ஷேர்சேட் என்பதை பயன்படுத்தலாம். ஷேர்சேட் செயலியை 15 இந்திய மொழிகளில், சுமார் 6 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.


நீங்கள் மொபைல் கேம் பிரியர் என்றால், PUBG க்கு மாற்றாக ஃபோர்ட்நைட் (Fortnite) உள்ளது. PUBG PC அதாவது கணினிக்கான PUBG விளையாட்டு செயலி கொரிய நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மொபைல் செயலி  சீனாவை சேர்ந்த Tencent நிறுவனம் உருவாக்கியது. Fortnite செயலி அமெரிக்க நிறுவனமான எபிக் கேம்ஸ் உருவாக்கியுள்ளது.


Also read: #BoycottChina பிரச்சாரத்திற்கு மத்தியில் அமோகமாக விற்பனையாகும் OnePlus 8Pro!


ஆஃப் லைனில் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஷேர்இட் ( Shareit) என்ற செயலிக்கு பதிலாக  உள்ள நீங்கள் Files by Google என்ற செயலியை பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் இமேஜ்கள், செயலிகள், வீடியோக்கள் ஆகியவற்றை இணைய வசதி இல்லாமல் பகிர்ந்து கொள்ளலாம்.


BeautyPlus என்ற சீன செயலிக்கு மாறாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட Indian Selfie Camera உள்ளது.


CamScanner என்ற சீன செயலிக்கு பதிலாக, Adobe Scan பயன்படுத்தலாம். 


மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்