சாம் ஆல்ட்மேன் கருத்து


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சாம்ஆல்ட்மேன் அண்மையில் பங்கேற்ற பாட்காஸ்ட் உரையாடலில் சாட்ஜிபிடியின் நன்மை மற்றும் தீமைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதற்கு முன்பே இது குறித்து பலமுறை அவர் பேசியிருந்தாலும் இம்முறை பேசும்போது சாட்ஜிபிடியால் ஏற்படப்போகும் ஆபத்தை தன்னால் யூகிக்கவே முடியவில்லை என தெரிவித்துள்ளார். அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். சாட்ஜிபிடிக்கு கற்பிக்கப்படும் மொழி அடிப்படையில் அது மக்களுடன் உரையாடி வருவதாக தெரிவித்திருக்கும் அவர், இது என்னென்ன மாற்றங்கள் மற்றும் ஆபத்துகளை கொண்டு வரப்போகிறது என்பதை இப்போது சொல்லவும் முடியாது என கூறியுள்ளார்.


மேலும் படிக்க | CHATGPT: ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி பயன்படுத்துவது எப்படி?


சாட்ஜிபிடி மாற்றம்


இன்னும் சில ஆண்டுகளில் சாட்ஜிபிடி அனைத்து துறைகளிலும் நினைத்து பார்க்க முடியாத மாற்றத்தை நிச்சயம் கொண்டு வரும். அந்த மாற்றத்தை யாராலும் இப்போது யூகிக்க முடியாது. அதேநேரத்தில் இதில் தீமைகளும் இருக்கின்றன. ஆனால் எந்தெந்த வழிகளில் அந்த தீமைகள் வரப்போகிறது என்பதையும் இப்போது என்னால் கூட யூகிக்க முடியவில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு அந்த தொழில்நுட்பம் வீரியமானது. நீங்கள் நினைத்து பார்க்காத கற்பனை செய்து பார்த்திராத முடிவுகளை சாட்ஜிபிடியால் கொடுக்க முடியும். 


அதற்காக அதனை பார்த்து மக்கள் பயப்பட வேண்டும் என சொல்லவில்லை. அதனை உருவாக்கியவர் என்ற முறையில் எனக்கு கொஞ்சம் கவலை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் சாட்ஜிபிடியில் தீமைகள் இருக்கிறது. ஆனால், அதனை என்னால் கூட கண்டுபிடிக்க முடியாது. அதனை பயன்படுத்துபவர்களை பொறுத்தே அதன் நன்மை தீமை இருக்கும் என சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக பேசியுள்ளார். 


எலான் மஸ்க் எச்சரிக்கை


சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களின் ஆபத்தை எலான் மஸ்க் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கும் அவர், அதனால் உண்டாகும் ஆபத்துகளை இப்போது யாராலும் கணிக்க முடியாது என கூறியிருக்கிறார். ஆனால், நிச்சயம் நன்மைகள் இருக்கும் அதேநேரத்தில் தீமையின் பக்கமும் இருக்கிறது.அதனை உலகம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதில் மட்டுமே? என்னுடைய பார்வை இருக்கிறது என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். சாட்ஜிபிடி உருவாக்கத்தில் இருந்த எலான் மஸ்க், பின்பு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் என்பது  குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க | சாட்ஜிபிடி கூட சாட் செய்தால் ரூ.2.50 கோடி சம்பளம்..! டெக் இளைஞர்களே தயாராகுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ