சாட்ஜிபிடி கூட சாட் செய்தால் ரூ.2.50 கோடி சம்பளம்..! டெக் இளைஞர்களே தயாராகுங்கள்

சாட்ஜிபிடி சாட்போட்டுடன் நீங்கள் சாட் செய்தால் 2.50 கோடி ரூபாய் ஆண்டுக்கு சம்பளம் கொடுக்க முன்னணி டெக் நிறுவனங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் இந்த வேலை அறிவிப்பும் வெளியாகிவிட்டது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2023, 03:43 PM IST
  • புராம்ப்ட் என்ஜினியர்களுக்கு அதிக சம்பளம்
  • சாட்ஜிபிடி நிறுவனங்களில் இருக்கும் வேலை
  • அமெரிக்க நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சாட்ஜிபிடி கூட சாட் செய்தால் ரூ.2.50 கோடி சம்பளம்..! டெக் இளைஞர்களே தயாராகுங்கள் title=

சாட்ஜிபிடி ஆதிக்கம்

ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி இப்போது டெக் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனைத்து துறைகளிலும் சாட்ஜிபிடி நுழைந்துவிட்டதால், அதனை பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் செய்ய டெக் நிறுவனங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைய சூழலில் எப்படி பயன்படுத்துவது என்பதை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பெரும்பாலான வேலைகளை ஏஐ சாட்போட்களே செய்துவிடும். அப்போது பல லட்சம் பேரின் வேலை கேள்விக்குறியாகும். 

என்னென்ன வேலைகள் ஆபத்து?

ஆசிரியர், வாட்ச்மேன், வழக்கறிஞர், மருத்துவ உதவியாளர், மருந்தாளுநர், நூலகர் உள்ளிட்ட பல பணியிடங்களை ஏஐ சாட்போட்கள் காலி செய்துவிடும். புரோகிராமிங் செய்து வைத்துவிட்டால் யார் யாருக்கு? என்னென்ன தேவையோ அதனை இந்த சாட்போட்களே கொடுத்துவிடும். உதாரணமாக, ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை விட அதிக தரவுகளுடன் எடுத்துகாட்டுகளுடன் சாட்போட்கள் செய்துவிடும்.

மேலும் படிக்க | Vivo Y11: ரூ. 10,000-க்குள் இப்படி ஒரு அசத்தல் போனா? விவோ அறிமுகம் செய்த அதிசயம்!!

சாட்போட் வேலை

இந்நிலையில், இதற்கான தயாரிப்புகளில் தான் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்போட்களை பயிற்றுவித்து வருகின்றன. அந்த பயிற்றுவிப்புகளுக்கு இப்போது ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆண்டுக்கு 2.70 கோடி ரூபாய் சம்பளத்தில் அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு அறிவிப்புகளை கொடுத்து, பொறியாளர்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இதில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. Prompt Engineers பணியிடங்களுக்கு இப்போது அதிக டிமாண்ட் இருக்கிறது. 

Prompt Engineers என்றால் என்ன?

ப்ராம்ட் இன்ஜினியரிங் என்பது AI துறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய வேலை. Prompt என்ஜினியர்கள், AI சாட்போட்களுடன் சாட் செய்யும் வல்லுநர்கள் ஆவர். இவர்கள் சாட்போட்கள் வேலைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்ய சிறந்த முறைகளைக் கண்டறிய வேண்டும். அவற்றை அதற்கேற்ப சாட்போட்களுக்கு கற்பிக்க வேண்டும். இதுதவிர சாட்போட்களில் இருக்கும் பிழைகள், அவற்றில் ஒளிந்திருக்கும் திறன்கள் ஆகியவற்றையும் கண்டறிய வேண்டும். இதில் டெவலப்பர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சாட்போட்களுடன் கோடிங் விளையாட்டை விளையாடி அது கொடுக்கும் பதில்களை கண்டறிய வேண்டும்.  

Prompt Engineers ஆவது எப்படி?

இப்போதைக்கு, Prompt Engineers மாறுவதற்கு குறிப்பிட்ட சான்றிதழ் அல்லது பட்டம் தேவையில்லை. கோடிங் மற்றும் டெக் துறையில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் மற்றும் தகுதியில் உங்களுக்கான வாய்ப்பு இருப்பதை நீங்கள் உறுதி செய்து Prompt Engineers பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஏஐ தொழில்நுட்பங்களின் வரம்புகள், அவை செயல்படும் விதம், கற்பிக்கும் செயல்முறை போன்ற அடிப்படை புரிதல்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முன் இருப்பது அவசியம். இனி கற்றுக் கொண்டால் கூட கூடிய விரைவில் Prompt Engineers பணிக்கு நீங்கள் தேர்வாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் படிக்க | Maruti Suzuki Car Price: மாருதி நிறுவனம் அளித்த ஷாக், கார்களின் விலை உயர்ந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News