பிரபல வீடியோ பகிர்வு வலைதளமான YouTube, பயனர்களுடன் உடனுக்குடன் தொடரப்புகொள்ளும் வகையில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

YouTube நிறுவனமானது, தனது பயனாளர்களுக்கு Mobile Live பதிப்பினை வெளியிட்டுள்ளது, இந்த பதிப்பின் மூலம் YouTube பயனர்கள் பார்வையாளர்களுடன் உடனுக்ககுடன் உரையாட இயலும் என தெரிவித்துள்ளது. Facebook, Instagram செயலிகளில் நேரடி வீடியோக்களை பதியும்போது பதிவாளர்கள் தங்களது பார்வையாளர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ள இயலும்.


அதே வசதியினை தற்போது YouTube பக்கத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ள YouTube இந்த புதிய சிறப்பம்சத்தினை கையாண்டு உள்ளது.


வழக்கமாக இத்தகு வீடியோக்களை பதிவுசெய்ய முயற்சிக்கையில், அந்த வீடியோ குறித்த தகவல்களை உள்ளீட கோரி செயலிகள் கேட்கும். ஆனால் YouTube-ல் தானா வீடியோவிற்கு ஏற்றார்போல் பெயர்களை குறிப்பிட்டுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனுடன் தானியங்கி பேச்சு அறிதல் (LASR) வசதியும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே வேலையில் தாங்கள் பதிவுசெய்யும் வீடியோக்களின் இடத்தினையும் இதில் குறிப்பிட இயலும் எனவும், அந்த இடத்திற்கு அருகாமையில் நிகழும் நிகழ்ச்சிகளையும் Youtube செயலி பயனர்களுக்கு தெரியபடுத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


தற்போது இந்த சேவை Mobile பதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளது. முன்பு வீடியோக்களை பதிவேற்றியது போலவே இந்த பதிப்பிலும் அனைத்து வசதிகளும் இருக்கும் எனவும், கூடுதலாக இந்த சிறப்பம்சம் இத்துடன் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!