கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிக்கும் நோக்கில் அவர்களுக்கு இலவசமாக தொலைபேசி பழுதுபார்க்கும் முன்முயற்சியில் சாம்சங் மற்றும் கூகிள் இறங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைபேசி பழுதுபார்க்கும் நிறுவனமான uBreakiFix உடன் இணைந்து இரு நிறுவனங்களும் பழுதுபார்ப்புகளை வழங்கவுள்ளன என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


READ | 48MP பின்கேமிரா, 16MP முன்கேமிரா என அசத்தும் Galaxy M21; விலை ₹10,999 மட்டும்!


இந்த இலவச தொலைபேசி பழுதுபார்ப்புக்கு தகுதியுள்ள அனைவரும் இலவச பழுதுபார்ப்பைப் பெற தங்கள் கேலக்ஸி தொலைபேசியில் காண்பிக்கப்டும் uBreakiFix இருப்பிடம் அல்லது மின்-அஞ்சலை பார்வையிட வேண்டும்.


மேலும் samsung.com மைபைல்களை வாங்கிய மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 30% வரை தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"Free Repairs for The Frontline" என்று அழைக்கப்படும் சாம்சங்கின் திட்டம், சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு கிராக் ஸ்கிரீன் மற்றும் பேட்டரி மாற்றுதல் உள்ளிட்ட இலவச பழுதுபார்ப்பு சேவைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


READ | இனி இலவசமாக பேசலாம்.. Reliance Jio-ல் வருகிறது WiFi calling!


கூகிளின் இலவச பிக்சல் பழுதுபார்க்கும் திட்டமும் சாம்சங்கின் திட்டம் போன்றது. "கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போனுடன் கூடிய அவசரகால பதிலளிப்பவர் அல்லது சுகாதார நிபுணர், சாதன மாதிரி அல்லது சேத வகைகளைப் பொருட்படுத்தாமல், ஒரு இலவச பழுதுபார்ப்பைப் பெறுவதற்கு uBreakiFix-ன் எந்தவொரு அமெரிக்க இடத்திலும் தனது ஐடி பேட்ஜை வழங்க முடியும்" என்று ஒரு uBreakiFix செய்தி அறிக்கை கூறுகிறது. இந்த திட்டம் ஜூன் 30 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.